விஜயும் நானும் பேசிக்காத காரணமே இதுதான்! இந்த இடத்தில் தொடங்கிய மாற்றம்! எஸ்ஏ சந்திரசேகர் ஓபன்
சென்னை: நடிகர் விஜய் 90's ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் 2கே கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது அரசியலிலும் காலடி எடுத்து வைத்து பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விஜய் குறித்து அவருடைய தந்தை பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் தானும் விஜய்யும் அதிகமாக பேசிக்கொள்ளாத காரணம் என்ன என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
இயக்குனர், நடிகர்கள் என்று பல பிரபலங்களின் குழந்தைகள் அவர்களைப் போலவே சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் நடித்து வந்த விஜய் இப்போது டாப் ஹீரோவாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய விஜயை ரசிகர்கள் இளைய தளபதி என்று ஆரம்பத்தில் அழைத்து வந்தனர். இப்போது தளபதி என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு அவர் பற்றிய விமர்சனங்களும் அதிகமாக இருக்கிறது.
அதிலும் விஜய் அவருடைய தந்தையோடு பேசுவதில்லை, அவருடைய மனைவியோடு பேசுவதில்லை.. குடும்பத்தை பிரிந்து விஜய் இருக்கிறார் என்றெல்லாம் பல வதந்திகள் பரவி வருகிறது. அதற்கு பதில் கொடுக்கும் வகையில் விஜய் உடைய நிகழ்ச்சிகளில் விஜயின் பெற்றோர் கலந்து கொள்கிறார்கள்.
அதிலும் சில வருடங்களுக்கு முன்பு விஜய் மீது மனக்கசப்பில் இருந்த அவருடைய தந்தை சந்திரசேகர் இப்போது விஜய் குறித்து பல பேட்டியில் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் பற்றி அவர் பேசுகையில் நான் விஜய்க்கு ரொம்பவும் ஸ்ட்ரிக்டான அப்பா. ஆரம்பத்தில் இருந்தே விஜய்யிடம் ஸ்ட்ரிக்ட்டாக தான் நடந்து கொள்வேன்.

என்னிடம் நடிக்க வரும் நடிகர்களிடம் நான் எப்படி நடந்து கொள்வேனோ அது போல தான் விஜய்யிடம் நடந்து கொள்வேன். அவனுடைய திறமையை அழகாக வெளியே கொண்டு வர வேண்டும், கட்டுப்பாடு உடன் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது படி நான் வளர்த்து விட்டேன். ஆனாலும் பொதுவாக அப்பா மகன்களுக்குள் இருக்கும் பாசத்தை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள் அதுபோலத்தான் நாங்களும்.
எதுவா இருந்தாலும் என்னுடைய மனைவியிடம் சொல்லி தான் என்னிடம் சொல்வார். நானும் என்னுடைய மனைவியிடம் சொல்லி தான் சொல்வேன். அதனாலேயே விஜய் ஏதாவது நிகழ்ச்சியில் வந்தால் கூட சிலர் விஜய் அவருடைய அம்மாவுக்கு கை கொடுக்கிறார், அம்மாவிடம் பேசுகிறார். அப்பாவிடம் பேசவில்லையே என்று கேட்கிறார்கள்.

அதற்கு காரணம் நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக பேசிக் கொள்ளாதது தான். ஆனால் அப்பா என்ற மரியாதை விஜய்க்கு உண்டு, எனக்கு என்னுடைய மகன் என்ற பாசமும் உண்டு. விஜய் இப்போது அரசியலில் நுழைந்து இருக்கிறார் அவர் அதில் பெரிய ஆளாக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. எனக்கு சமூக சேவை செய்வது ரொம்பவும் பிடிக்கும்.
எந்த தப்பு நடந்தாலும் அதை தட்டிக் கேட்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால் தான் என்னுடைய படங்களில் கூட கதாநாயகர்கள் கோபமானவர்களாக இருப்பார்கள். கோபமானவர்கள் என்றால் வீணாக பிரச்சனை செய்பவர்களாக இல்லாமல் ஒரு தப்பு நடந்தால் அங்கு கோபப்பட்டு அதை தட்டி கேட்பவர்களாக இருப்பார்கள். அது என்னுடைய ரத்தத்தில் இருக்கிறது.

அதைத்தான் விஜய்யும் இப்போது செய்கிறார். என்னிடமிருந்து விஜய்க்கு அந்த மாற்றம் வந்திருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். விஜய் இந்த நாட்டு மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என அந்த பேட்டியில் எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
-
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications