Chandralekha: புது பொண்டாட்டிக்கு ஜால்றா.. பழைய பொண்டாட்டிக்கு சப்போர்ட்?
சென்னை: சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் சபரி கேரக்டர் ரொம்ப கையாலாகாத தனமாக இருக்கிறது. குழந்தை குழந்தை என்று வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக சபரியும், லேகாவும் நடந்துகொள்வது சரியா? புது பொண்டாட்டி சரண்யா பழைய பொண்டாட்டி லேகாவை திட்ட, பார்த்துக்கொண்டு நிற்கிறான் சபரி.
சபரி லேகாவை டிவோர்ஸ் செய்துட்டு சரண்யாவை இன்னொரு கல்யாணம் செய்துக்கறான். அப்போதுதான் தெரிகிறது லேகா வயிற்றில் தன் குழந்தை வளருது என்று.
உடனே சரண்யாவுடன் சேர்ந்து வாழ முடியாமல், லேகாவின் வயிற்றில் வளரும் தனது குழந்தைக்கு உரிமை கொண்டாடி லேகாவை அடிக்கடி பார்க்க வெளியில் வருமாறு அழைப்பு விடுக்கிறான்.

சந்திரலேகா சீரியல்
சன் டிவியில் சந்திரலேகா சீரியல் கடந்த 6 வருடமாக மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.புதிது புதிதாக கதைக்குள் கதை.. இருக்கும் கதையையே ஜவ்வு மாதிரி இழுப்பது என்று இப்படியும் டிவி சீரியல் எடுக்க முடியுமான்னு வியப்பையே தருகிறது சந்திரலேகா சீரியல் குழு.

லேகா சபரி
லேகா சபரியை விரும்பி கல்யாணம் செய்துக் கொள்ளும் பணக்கார வீட்டுப் பொண்ணு. லேகாவின் அம்மா லேகாவை சந்தோஷமா வாழ விடாமல் லேகாவுக்கு நிறைய சொல்லித் தர்றாங்க. முதலில் அம்மா பேச்சைக்கேட்டுக்கொண்டு இருந்த லேகா பின்னர் திருந்தி சபரியை டிவோர்ஸ் செய்ய சம்மதிக்க மறுக்கிறாள்.

லேகா கை எழுத்தை
லேகா கை எழுத்தை அம்மா போட்டுவிட, சபரிக்கு லேகாவிடம் இருந்து டிவோர்ஸ் கிடைத்து விடுகிறது. அந்த சமயத்தில்தான் சபரியின் குழந்தை தனது வயிற்றில் வளர்வதைத் தெரிந்து லேகா சபரியிடம் மன்றாடுகிறாள். சபரி குடி போதையில் பொண்டாட்டி லேகாவைத் தொட்டதை மறந்துவிட்டு லேகா பொய் சொல்கிறாள் என்று அசிங்கமாக திட்டுகிறான்.

சபரியின் குழந்தை
சரண்யா கழுத்தில் சபரி தாலி கட்டிய உடன்தான் லேகா வயிற்றில் உண்மையாக தனது குழந்தைதான் வளர்கிறது என்பதை உணர்கிறான். இப்போ லேகா வயிற்றில் இருக்கும் குழந்தை தனக்கும் உரிமையானது என்று சொல்லி லேகாவை அடிக்கடி பார்க்கிறான்.சரண்யாவை தொட அவனுக்கு மனது வரவில்லை.

லேகா சரண்யா
இந்த நேரத்தில்தான் புருஷன் சபரியுடன் ஹோட்டலுக்கு வந்த சரண்யா, லேகாவை இன்னும் கர்ப்பமா இருக்கறது மாதிரியே டிராமா பண்றியாடின்னு கேட்க, சபரி வெறுமனே பார்த்துக்கொண்டு நிற்கிறான். அப்போதுதான் சந்திராவின் புருஷன் சஞ்சய், புது பொண்டாட்டிக்கு ஜால்றா அடிப்பவன் பழைய பொண்டாட்டிக்கு எப்படி சப்போர்ட் பண்ணுவான்னு நிதர்சனத்தை கேட்கிறான்.
கெட்ட ஆண்களை நம்பி ஏமாறும் பெண்களுக்கு இந்த காட்சி நல்ல பாடம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications