நிவர் வந்தா எனக்கென.. மொட்டை மாடியில் குளுகுளுன்னு நனைந்த சாக்ஷி!
சென்னை: நிவர் புயல் இல்லை எந்த புயல் வந்தாலும் அந்த மழையிலும் புயலிலும் ஆட்டம் போட்டு விளையாட ஒரு குரூப் இருக்கத்தான் செய்யுது.
எப்படி மழை பெய்தால் என்ன நாங்க அதையே ரசிப்போம் என்று சாக்ஷி அகர்வால் மொட்டை மாடியில் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து ஆடிய ஆட்டம்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
சில நாட்களாக நிவர் புயலைப் பற்றித்தான் நியூஸ் சேனல் முதல் சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

சூப்பர் புயல்
இந்த புயலின் தாக்கம் அந்த அளவிற்கு கடுமையாக இருக்கிறது என்றும் மழையைப் பற்றியும் அதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. அதுபோல தற்போது புயலின் தாக்கமும் மழையின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. ஆனால் எந்த மழை வந்தாலும் எங்களுக்கு அசால்ட் என்றுதான் சிலர் நடந்து கொண்டிருக்கின்றனர்.

சூட்டைக் கிளப்புவோம்ல
மழை வந்தால் சும்மா இருக்க மாட்டோம் என்று அவர்களின் சூட்டை தணித்து ரசிகர்களிடையே சூட்டை கிளப்பி இருக்கும் சாக்ஷி அகர்வாலின் வீடியோக்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் திறந்ததும் பக்கம் பக்கமாக சாக்ஷியின் லேட்டஸ்ட் மழையில் ஆடிய ஆட்டம் பாட்டம் தான் வைரலாக பரவி வருகிறது.

மோகம் கொள்ளும் மழை
அதுவும் அவர் ரசிகர்கள் இந்த மாதிரி வந்து ஆடினா மழை எப்படி போகும் மழையே மோகம் கொள்ளும் உனது அழகில் என்று கவிதைகளை பொழிந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மழையில் அவர் நனையும் போது பல ரசிகர்களின் மனதிலும் குளிர் அடிக்கிறதாம் . அவர் நனைவதை பார்த்து பலர் உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

டேக் கேர் பேபி!
அதிலேயும் சிலருக்கு மழையில் நனைந்து சாக்ஷிக்கு காய்ச்சல் எதுவும் வந்துவிடக் கூடாது என்றுதான் கவலையாம். ஆனாலும் அவர் உடம்பெல்லாம் மழையில் சொட்ட சொட்ட நனைந்து ஆடும் போது பலருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அப்படியே மெய்மறந்து தான் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் குழந்தையாக இருக்கும் போது நாங்களும் இப்படிதான் கொஞ்சி ஆடினோம்.

நாங்க ரசிக்கிறோம்
தற்போது எங்களால் முடியவில்லை நீங்கள் ஆடுவதை நாங்கள் ரசிக்கிறோம் என்றும் பெருமூச்சு விட்டு வருகிறார்கள். அதுமட்டுமா டைமிங் க்கு தகுந்த மாதிரி விண்ணோடு மேள சத்தம் என்னும் பாட்டை வேற எடிட் பண்ணி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவர் மழையில் ஆடும்போது எதை ரசிப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்களாம்.

எதை ரசிக்க எதை விட
மழையா அல்லது இவரது ஆட்டத்தையா என்று பிரித்துப் பார்க்க முடியாமல் ரசிகர்களும் என்ஜாய் செய்கிறார்கள். பார்த்து ஆடுங்க வழுக்கி விழுந்திட போறீங்க என்றும் ஆட்டத்தின்போது மொட்டை மாடியில் தண்ணீர் செல்லும் வேகத்தை பார்த்து பலர் அறிவுரை கூறி இருக்கிறார்கள். ஆனாலும் ஆட்டம் வேற லெவல்ல தான் இருக்கிறது . புயல் கூட ஒரு நிமிடம் இவரது ஆட்டத்தை பார்த்து அப்படியே மெய்மறந்து நின்று விடும் என்று ரசிகர்கள் கமெண்டுகளை போட்டுக் கொஞ்சி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications