குட்டிச் சுவற்றில்.. காலை மடக்கி.. சாய்ந்து பார்த்த சாக்ஷி ...சரிந்து விழுந்த ரசிகர்கள்!
சென்னை : குட்டி சுவற்றில் காலை மடக்கி , கால் மீது கை வைத்து பார்ப்பவர்களை ஏங்க வைத்திருக்கிறார் சாக்ஷி அகர்வால் .
எங்கேயோ பார்த்தாலும் தன்னைப் பார்க்காதவர்களையும் இங்கே பார் என அழைக்கும் வகையில் சாக்ஷியின் ஹாட்டஸ்ட் படங்கள் அமைந்துள்ளன.
புடவையில் வந்தாலும் நான் என்னுடைய ரசிகர்களுக்கு தேவதைதான் என ஸ்டைலாக சிரித்தபடி ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறார்.

புதுசு கண்ணா புதுசு
சாக்ஷி அகர்வால் என்னும் பெயரை சொன்னதும் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் ஆட்டோமேட்டிக்காக லைக் பட்டனை அழுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய ரசிகர்களுக்காக புதுசு புதுசாக போட்டோஸ்கள் போஸ்ட் போட்டு வருகிறார் .இவர் பார்த்து பார்த்து போஸ்ட் போட ரசிகர்கள் ரசித்து ரசித்து கமெண்ட் போடுகின்றனர்.

கட்டுக்கோப்பு முக்கியமில்லியா
தன் அழகை மெருகேற்றுவது பலரும் பியூட்டி பார்லரை நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர் உடற்பயிற்சியை தான் நம்பி கொண்டிருக்கிறார் . அதனாலே மணிக்கணக்கில் உடற்பயிற்சிக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார் .உடற்பயிற்சி செய்வதால் மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் கெத்து தான் என தன்னுடைய அழகின் ரகசியத்தை ரசிகர்களுக்காக கூறியிருக்கிறார் . எப்படி இருந்த நான் இப்படி மாறி விட்டேன் என இதற்கு முன்பு இருந்ததற்கும் தற்போது அவரின் அழகு கூடிய ரகசியத்தை அனைவருக்கும் கூறியிருக்கிறார்.

பஸ்ட் தான் பெஸ்ட்
நடிகைகள் பலரும் போட்டி போட்டு போட்டோ ஷூட் எடுத்து வந்தாலும் இவர் எடுக்கும் போட்டோஸ்கள் தான் தினமும் இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் வைரலாக வலம் வருகிறது .சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் எத்தனை பேர் எனக்கு போட்டியாக வந்தாலும் நான் தான் ஃபர்ஸ்ட் என ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் .காலை மாலை என இரண்டு நேரமும் போஸ்ட் போட்டு இவர் சமூக வலைத்தளத்தை கலக்கோ கலக்கு என கலக்கி வருகிறார்.

சூர்யாவுக்கும் ஜோடி ஆகியாச்சு
இவர் ஒரு நடிகையாக சினிமாவில் தனது திரைப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக மாடலாக தான் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .ஆரம்பகாலத்தில் நகைக்கடை முதல் ஜவுளி கடைகளுக்கும் விளம்பர மாடலாக நடித்து இருக்கிறார். பெரிய நடிகர்களுடன் திரைப்படத்தில் நடிக்காவிட்டாலும் விளம்பரங்களில் நடித்து விட்டார். நடிகர் சூர்யாவுடன் மலபார் கோல்ட் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் .அதுமட்டுமல்லாமல் ஃபேஷன் ஷோக்களில் தோன்றியிருக்கிறார். ஜில்லுனு ஒரு கலவரம் என்ற வீடியோ ஆல்பத்தில் நடித்திருக்கிறார்.

ரசிகர்களின் மனதில் விதை போல
ஆரம்ப காலகட்டத்தில் நடிப்பில் இருந்த ஆர்வத்தின் காரணமாக சின்ன சின்ன ரோல்களில் நடித்துக்கொண்டிருந்தார். ராஜா ராணி, காலா ,விசுவசம் ,திருட்டு விசிடி, டேடி போன்ற பல திரைப்படங்களிலும் இவர் ஒருசில சீன்களில் வந்தாலும் கூட ரசிகர்களின் மனதில் விதை போல விழுந்து விட்டார் .ஆனால் திரைப்படத்தை எல்லாம் தாண்டி இவருக்கு பேரம் புகழும் வாங்கிக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய திரை பயணத்திற்கு திருப்புமுனையாக பயன்படுத்திக்கொண்டார்.

நடுவரும் ஆகியாச்சு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பனசுந்தரி என்னும் நிகழ்ச்சியில் ஜட்ஜாக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது . இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடமும் கிடைத்தது .இதில் ரசிகர்களிடம் இவருக்கு கிடைத்த வரவேற்பைப் வைத்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் அந்த நிகழ்ச்சியில் 49 ஆவது நாள் வெளியேற்றப்பட்டார் .அதற்குப்பிறகு சமூக வலைத்தளத்தை வெறி தனமாக கலக்க ஆரம்பித்து விட்டார். போட்டோ சூட்டிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் இவருக்கு சீக்கிரத்தில் சினிமா வாய்ப்பு கொடுத்து விடுங்கள் என ரசிகர்களே கதறி வருகின்றனர்.

மனதை அள்ளும் பார்வை
அடிக்கடி போட்டோ சூட் எடுத்துக்கொண்டு இருந்தாலும் தற்போது சேண்டல் கலர் புடவையில் பின்க் கலர் ஜாக்கெட்டில் குட்டி சுவற்றில் உட்கார்ந்தபடி காலை மடக்கி வசீகரிக்கும் பார்வையால் காந்தப் புன்னகையை வீசி இருக்கிறார் .இவருடைய சிரிப்பையும் ,அந்த பார்வையும் பார்த்த ரசிகர்கள் பார்த்த நொடியே விழுந்துவிட்டனர் .அதனாலே என்ன மாதிரி கமெண்ட் போடலாம் என்று கூட யோசிக்க முடியாமல் ஹாட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications