சாக்ஷி அகர்வாலுக்கு இவ்வளவு அழகான பெண் குழந்தையா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது பிக்பாஸ் 4 விருவிருப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் போன சீசனில் கலந்துகொண்ட சாக்ஷி அகர்வால் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு வேற லெவலில் வைரலாகி வருகிறார்.

இப்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து பல ரசிகர்களும் அவரா இவர் என்று வாயில் கை வைத்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு சின்ன குட்டி ஏஞ்சல் ஆக மாறிவிட்டார்.

இதுவரைக்கும் ஹாட் போட்டோஸ்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்த சாக்ஷி தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தால் அல்லது அவர் குழந்தையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ஃபேஸ் ஆப் யூஸ் பண்ணி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

பேஸ் ஆப்பில் வீடியோ

பேஸ் ஆப்பில் வீடியோ

பலரும் இந்த பேஸ்ஆப் களை யூஸ் பண்ணி சந்தோஷம் அடைந்து கொண்டிருக்கும் போது இவர் இந்த பேஸ் ஆப்பில் ஒரு வீடியோவை எடிட் பண்ணி அப்படியே இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டிருக்கிறார் .இந்த வீடியோவை பார்த்ததும் பல ரசிகர்களும் ஐயோ என்ன அழகு இந்த மாதிரி பேரழகு யாருமில்லை என்று இவருக்கு விசிறி வீசி கொண்டிருக்கின்றனர்.

க்யூட் போஸ்

க்யூட் போஸ்

எப்போதும் ஹாட் போஸ்களை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது குழந்தையைப் பார்க்கும்போது கொஞ்சி வருகின்றனர். சிக்ஸ் பேக் என்று சொன்னவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சூர்யாதான் .ஆனால் லேடிஸில் சிக்ஸ்பேக் வைத்து பிரபலமான நயன்தாரா முதல் தற்போது நானும் இருக்கிறேன் என்று அடிக்கடி இவருடைய சிக்ஸ் பேக்கை காட்டி சேலை கட்டி இருந்தாலும் சரி மாடல் உடையிலும் சரி ரசிகர்களை சூடாகி வரும் இவருடைய போட்டோஸ்கள்.

சிக்ஸ் பேக் அழகி

சிக்ஸ் பேக் அழகி

ஆனால் இவர் தற்போது குழந்தையாக மாறி இருப்பதை பார்த்ததும் இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வந்த நெட்டிசன்கள் கூட தற்போது கொஞ்சி கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அதுலயும் பலர் இவருடைய இந்த வீடியோவுக்கு கவிதை மழைகளை பொழியத் தொடங்கி விட்டார்கள் .இவருக்கு பாசமாக போடும் கமெண்ட்களுக்கு தற்போது சாக்ஷியும் ஹாட்டின்களை பறக்கவிட்டு ரிப்ளை பண்ணி இருக்கிறார் .

ரசிகர்கள் பரவசம்

ரசிகர்கள் பரவசம்

இதை பார்த்ததும் மேலும் பரவசமான இவருடைய ரசிகர்கள் இவருடைய வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்கள். அதனால் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோஸ் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் இருக்கும் போது இவரை பலர் நல்லவரா கெட்டவரா என்று கூட யோசிக்க முடியாத அளவிற்கு தான் இவர் இருந்து கொண்டே இருந்தார் .ஆனால் இந்த வீட்டை விட்டு அவர் வெளியே வந்த பிறகு இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.

காலா மருமகள்

காலா மருமகள்

இதற்கு முன்புகூட இவர் காலா படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்தார். தற்போது சில படங்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் தனது திறமையை நிரூபிக்கும் அளவிற்கு இன்னும் வாய்ப்பு வரவில்லை என்று வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் வாய்ப்புக்காக காத்து மட்டுமே இருக்கக் கூடாது நாமளும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று களமிறங்கினார்.

உடம்பைக் குறைச்சாச்சு

உடம்பைக் குறைச்சாச்சு

புசுபுசுவென்று இருந்த தனது உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறி அடிக்கடி போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பரப்பி வருகிறார் .இவர் போஸ்ட்க்கு பெருமளவில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஹாட் போட்டோஸ்களை போட்டு இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகி வருகிறது.

வாயும் உதடும் அப்படியே

வாயும் உதடும் அப்படியே

இவருடைய இடத்தை பிடிப்பதற்காக பலர் போட்டிபோட்டுக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தினாலும் இவருடைய இடத்தை இன்னும் யாரும் பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு இவர் ரசிகர்கள் மனதில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இப்போது இந்த பேஸ் ஆப் வீடியோ செம பாப்புலராக பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வாயும், உதடும் அப்படியே அச்சு அசலாக பொருந்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+