காற்று வாங்கும் சாக்ஷி அகர்வால்...பார்த்து வேர்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள்..
சென்னை : வெயிலுக்கு இதமாக சட்டை பட்டனை கழற்றி விட்டு கையை தூக்கி கலக்கல் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வாலை பார்த்து ரசிகர்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள்.
எனக்கு ராணியாக நான் வாழ்கிறேன் என்று இவர் கொடுத்த கேப்ஷனை பார்த்து வெறியான ரசிகர்கள் உருகி உருகி கமெண்டுகளை கொட்டுகிறார்கள்.
வெளியே வெள்ளை உள்ளே கருப்பாக கண்ணுக்கு உள்ள காம்பினேஷனை உடையில் காட்டி ரசிகர்களுக்கு போதை ஏற்றி விட்டாரே சாக்ஷி அகர்வால் என்று ரசிகர்கள் துள்ளாட்டம் போடுகின்றனர்.

அழகு ராணி தான்
"ஆமாம் நான் ஒரு ராணி. என் பலம் உங்களை மிரட்டினால் நீங்கள் ஒரு பலவீனம் என்பதை உணரலாம்" என நம்புகிறேன்..... இது ஏதோ கவிதைத் தொகுப்பு என்று நினைத்துவிடாதீர்கள், இந்த மோட்டிவேஷன் கேப்ஷன் உடன் சாக்ஷி தற்பொழுது போஸ்ட் செய்துள்ள போட்டோக்கள் தான் சாக்ஷி ரசிகர்கள் மட்டுமின்றி சாமானிய இணையவாசிகளையும் சாக்ஷி பக்கம் சாய்த்து வருகிறது.

மொத்த அழகும் தெரியுது
சாக்ஷி இந்தக் கோணத்தில் போட்டோ எடுத்த கேமராமேன் உண்மைக்கு கொடுத்து வைத்தவர் தான்,அவருக்குத்தான் மச்சம் இருக்கிறது என்று ரசிகர்கள் பொறாமைப்படும் அளவிற்கு கேமராவிற்கு எந்த வித பங்கமும் இல்லாமல் தன் அங்கங்களை காட்டி போஸ் கொடுத்துள்ளார். சாக்ஷியின் இந்த போஸ்களை பார்க்கும்பொழுது கேமராமேன் மட்டுமல்ல கேமராவும் புண்ணியம் தான் செய்திருக்கும் போல,ஏற்கனவே போட்டோக்களில் தாராளம் காட்டும் குபேர மனதுக்குச் சொந்தக்காரர் சாக்ஷி இந்த போட்டோக்களில் அதை நிரூபித்துள்ளார். என்னத்த தான் சாப்பிடுவாங்களோ!இப்படி உடம்ப மெயின்டன் பண்றாங்க!! என்று பெண் ரசிகைகள் கூட ஏங்கும் அளவிற்கு தங்கமாய் மின்னுகிறார் சாக்ஷி.

மாற்றம் கொடுத்த பிக் பாஸ்
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் சரி, பல சீரியல்கள் திரைப்படங்களில் சாக்ஷி தோன்றியிருந்தாலும்,அனைவரது மனதிலும் பிக் பாசில் பார்த்த சாக்ஷியின் தோற்றமும் செயல்களுமே தமிழ் ரசிகர்களின் மனங்களில் இப்படி இருப்பவர்தான் சாக்ஷி என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. இவரது ஹாஸ்கி வாய்ஸில், என்றும் ஒரே மாதிரியாக இருக்கும் இவரது ஸ்ட்ரக்சருமே மற்ற கன்டஸ்டன்ட்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டியது.பிக் பாஸ் வீட்டில் இவர் டஃப் கன்டஸ்டன்ட் ஆக இருந்தாலும்,கவின்-லாஸ்லியா ஜோடிகளின் காதல் நெருக்கத்தால் சற்று பொஸசிவ்வான சாக்ஷி, அதனாலே தனது கேமில் சரியாகக் கவனம் செலுத்த தவறிவிட்டார்.

இப்படி பேசலாமா
தற்பொழுது இந்த கெட்டப்பில் சாக்ஷியை பார்த்த ரசிகர் ஒருவர், "வாழ்க்கையை தொலைச்சிட்டியே கவினு" என்று வடசென்னை ஸ்லாங்கில் நொந்து போய் கூறியுள்ளார். இவர் உடல்நலனில் அக்கறை கொண்ட நெட்டிசன் ஒருவர் இவ்வளவு ஃப்ரியா இருக்கீங்களே உங்களுக்கு குளிரலலையா? நான் வேனும்னா போர்வையாக வரவா? என்று துணி கடைக்காரர் ரேஞ்சுக்கு கேட்டுள்ளார். "நான் ராணி தான்" என்று இவர் போட்டுள்ள கேப்ஷனை பார்த்து எந்த ஊர்லங்கமா ராணி இவ்வளவு கம்மியா துணி போட்டு இருக்கு?முதல்ல துணியை ஒழுங்கா போடுங்கமா... என்று அறிவுரை வழங்கியுள்ளார். ஒருவேளை சலிக்கும் வரை போட்டோவை பார்த்து முடித்து விட்டாரோ என்னவோ!!?

எல்லாமே அசத்தல் தான்
போட்டோ சூட்டிலேயே தனது ரசிகர்கள் மனதை சுட்டுவரும் சாக்ஷியின் தொடர் போட்டோ சூட்டுகளையும் வீடியோக்களையும் பார்த்த ,ஒரு ரசிகர் "இப்படி கேப்பே இல்லாமல் போயிட்டு இருந்தா எப்படி? எங்களுக்கு ஒரு ரெஸ்ட் வேண்டாமா!!..."என்று போட்டோக்களை பார்ப்பதற்கே ரெஸ்ட் கேட்டு ரிக்வெஸ்ட் பண்ணியுள்ளார். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் ஹார்டின்களையும், ஃபயர் சிம்பிள்களையும் போட்டு கமெண்ட் பாக்ஸ்களையே கதகதப்பாக வைத்திருக்கின்றனர்.சாக்ஷி அகர்வால் இந்த கெட்டப்புகளில் தொடர்ந்து போட்டோ போட்டால் இவரது ரசிகர்கள் அகர்வால் மருத்துவமனைக்குத் தான் சென்று கண்களுக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் ஏத்த வேண்டும் போல!!!...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications