Siva Manasula Sakthi: புருஷனோட எச்சி.. சந்தோஷித்த சக்தி.. காதல்ல இது சகமஜப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் சொல்லுங்க.. சென்டிமென்ட்டை வச்சு வெளுத்து வாங்குவதில் நம்ம ஊர் டிவி சீரியல்களுக்கு இணையே இல்லை.

ஏதாவது சென்டிமென்ட் இல்லாமல் ஒரு சீரியலும் இங்க ஓட முடியாது. அப்படி ஒரு அட்டாச்மென்ட்டோட வலம் வருதுங்க நம்ம சீரியல் பார்ட்டிங்க. ஏதாவது ஒரு சென்டிமென்ட் கண்டிப்பா இருக்கும். அம்மா,அக்கா, மாமியார் மாமனார் இப்படி ஏதாவது.

அப்படித்தாங்க நம்ம சிவா மனசுல சக்தி சீரியலிலும். காதல் நிரம்பி வழிகிறது சிவா, சக்தி இடையே.. சும்மா சொல்லக் கூடாது. ரொமான்ஸுன்னாலும் அதில் ஒரு தாம்பத்ய புரிதல் இருக்கு பாருங்க.. சூப்பர்.

புருஷன் பொண்டாட்டி

புருஷன் பொண்டாட்டி

இன்னிக்கு ஈவ்னிங் வரப் போற சீரியலுக்கான எபிசோட் பத்திய புரோமோ போட்டிருக்காங்க பாருங்க. அதைப் பார்த்தபோது அடடே இப்படில்ல இருக்குணும் புருஷன் பொண்டாடின்னா என்றுதான் நினைக்கத் தோன்றியது. அப்படி ஒரு இயல்பு, லவ் எல்லாமே கலந்து கரைபுரண்டோடுகிறது.

கொய்யாக் கடி

கொய்யாக் கடி

சக்தியும், சிவாவுவம் உட்கார்ந்திருக்காங்க. சிவா கொய்யாக் காயை எடுத்து கடிக்கிறான். அதைப் பார்க்கும் சக்தி, அதை சிவாவிடமிருந்து பிடுங்கி தானும் எச்சில் கடி கடிக்கிறா. இதைப் பார்க்கிறான் சிவா.

புருஷன் எச்சில்

புருஷன் எச்சில்

உடனே சக்தியிடம், சக்தி அது நான் கடிச்சது. எச்சியை சாப்பிடுறியே என்று கேட்க, புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல இதெல்லாம் பார்த்தா முடியுமா என்று கேஷுவலாக கேட்டபடி சிவா கடித்த கொய்யாக் காயை ருசித்து ரசித்து கடித்து உண்கிறாள்.

சந்தோஷ சிவா

சந்தோஷ சிவா

சாப்பிட்டபடியே மேலும், காதல்ல இதெல்லாம் சகஜமப்பா என்றும் சொல்ல.. அதைக் கேட்டு சந்தோஷமடைகிறான் சிவா.. பிறகென்ன புருஷன் பொண்டாட்டிக்கு மத்தியில் எப்படி எச்சில் இருக்க முடியும்.. கலந்தடித்து விளையாட வேண்டியதுதானே.. சந்தோஷமான காட்சிங்க இது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+