மாதத்திற்கு 60 கோடி..! சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலம்! எல்லோருக்கும் தெரிந்தவர் தான்!
சென்னை: சினிமாவில் குறிப்பிட்ட நாட்களுக்கு நடிப்பதற்காக பிரபலங்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதேபோல சின்னதிரையிலும் ஒரு சிலருக்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பணத்தை வாரி வழங்குகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலம் யார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது மாதத்திற்கு 60 கோடிக்கு மேலே சம்பளம் வாங்குவது நடிகர் சல்மான்கான் என்று கூறப்படுகிறது. எந்த நிகழ்ச்சிக்காக என்ற தகவலை பார்க்கலாம்.
ஆரம்பத்தில் எல்லாம் சினிமாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அங்கு மார்க்கெட் குறைய தொடங்கிய பிறகுதான் சின்னத்திரை பக்கம் திரும்புவார்கள். ஆனால் இப்போது நிலைமையே வேறு மாதிரியாக இருக்கிறது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் போதும் இங்கு ரசிகர்களின் மனதை எளிமையாக கவர்ந்து விடலாம் அதற்குப் பிறகு சினிமாவை பார்த்துக் கொள்ளலாம் என்று பலர் பிளான் போட்டு அதற்காக முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரியாலிட்டி நிகழ்ச்சி
அதேபோல ஒரு சில பிரபலங்கள் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும்போது சின்னத்திரையிலும் அடி எடுத்து வைத்து அங்கும் தங்களுக்காக ஒரு முத்திரையை பதித்து விடுகிறார்கள். டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் நிகழ்ச்சிக்கு அதிகமான விளம்பரங்கள் கிடைக்கிறது. அதற்காக அந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக புகழின் உச்சத்தில் இருக்கும் பிரபலங்களை சின்னத்திரையில் கலந்து கொள்ள வைக்கிறார்கள்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்
அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளில் இப்படித்தான் செயல்படுகின்றனர். நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற போது பெரிய அளவில் பேசப்பட்டது. எப்படி இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வருவார் என்பது தான் பலருடைய கேள்வியாக இருந்தது. ஆனாலும் கமல்ஹாசன் பல சீசன்களாக இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார்.
நடிகர் சல்மான்கான் சம்பளம்
கமல்ஹாசனை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலம் ஒருவர்தான் சின்னத்திரையில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர் என்று கூறப்படுகிறது. அது வேறு யாருமில்லை நடிகர் சல்மான்கான் தான். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 250 கோடி சம்பளம் கிடைத்ததாக கூறப்படுகிறது. சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி கலர்ஸ் டிவி மற்றும் ஜியோ சினிமாவிலும் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி முதல் ஜனவரி 19, 2025 வரை ஒளிபரப்பானது. 15 வாரங்கள் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான நிலையில் சல்மான் கானுக்கு 250 கோடி அதாவது மாதத்திற்கு 60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications