Samantha: வாழ்வின் புது தொடக்கம்.. 2வது கல்யாணத்தை அறிவித்த சமந்தா! க்யூட்டான போட்டோஸ்! குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை சமந்தா தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதோடு தன்னுடைய திருமண புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை சமந்தாவும் இயக்குனர் ராஜ் நிடிமோருவும் சில மாதமாகவே காதலித்து வருகின்றனர். சமந்தாவின் முதல் கணவர் நடிகர் நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு சமந்தா ராஜ்யை காதலிக்க தொடங்கினார். இவர்கள் இருவரையும் பற்றி பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில் அது குறித்து சமந்தா எந்த இடத்திலுமே விளக்கம் கொடுக்கவில்லை.

சமந்தாவின் திருமணம் இன்று கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இந்த திருமண பங்க்ஷனில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்களை சமந்தா பதிவிட்டு இன்றைய நாள் 1 - 12- 2025 என்று குறிப்பிட்டு இன்று என்னுடைய திருமணம் நடைபெற்றது இனிய புதிய தொடக்கம் என்பது போல போஸ்ட் போட்டு இருக்கிறார்.
சமந்தா, நாக சைதன்யா உடன் நடந்த திருமணத்திற்கு பிறகு இயக்குனர் ராஜ் நிடிமோரு இயக்கிய தி ஃபேமிலி மேன் 2 சீரிஸில் நடித்திருந்தார். அந்த சீரிஸில் சமந்தா கவர்ச்சியாக நடித்தார். அதனால்தான் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருக்கும் பிரச்சனையே வந்ததாக அந்த நேரத்தில் செய்திகள் வெளியானது.
பிறகு நாக சைதன்யாவை பிரிந்ததும் ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ்யை சமந்தா காதலிக்க தொடங்கியதாக தெரிகிறது. சமந்தாவை போல ராஜுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். சமந்தாவுக்கு இப்போது 38 வயதாகிறது. ராஜ்க்கு 46 வயது ஆகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா பாலிவுட்டில் நடிக்க தொடங்கி பிறகு ஹாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருந்தார். சமீப காலமாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். ஆனால் அதிலும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இன்று தன்னுடைய புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் சமந்தாவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications