இதுதான் ரியல் வெற்றி.. பழசை எல்லாம் ஓரம் போடு.. மாஸ் காட்டும் சமந்தா..இப்போ போட்டி யாரு கூட பாருங்க!
சென்னை: தென்னிந்திய சினிமாவில் இப்போது பெரிய அளவில் பேசப்படும் விஷயம் என்னன்னா, நடிகை சமந்தா நடித்த 'மா இண்டி பங்காரம்' படமும், கன்னட நடிகர் துருவா சர்ஜா நடித்த 'KD' படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது என்பதுதான். இந்த இரண்டு படங்களும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனால் பாக்ஸ் ஆபிஸில் நேரடி மோதல் உருவாகி, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சமந்தா வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை
சமந்தா பற்றி சொல்லணும்னா, அது ஒரு சாதாரண நடிகையின் பயணம் இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அந்த உயரத்தை அடைய அவர் சந்தித்த சவால்களும் குறையாது. நாக சைதன்யா உடனான விவாகரத்து, அதற்கு பிறகு சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்கள், உடல்நல பிரச்சனைகள்-இதெல்லாம் ஒரே நேரத்தில் வந்தாலும், அவர் தளராமல் மீண்டும் வலிமையாக திரும்பி வந்திருக்கிறார்.
எதிர்பார்ப்பு படம்
'மா இண்டி பங்காரம்' படம் கூட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த கதையுடன் உருவாகி இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமந்தா திரைக்கு வர்ற படம் என்பதாலேயே இந்தப் படத்துக்கு ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கிறது. 'குஷி'க்குப் பிறகு இவரோட படம் வெளியாகாததால், ரசிகர்கள் இந்தப் படத்தைக் காத்திருக்கிறார்கள்.
ஒரே நாள் ரிலீஸ்
மறுபக்கம் துருவா சர்ஜா - கன்னட சினிமாவில் 'ஆக்ஷன் பிரின்ஸ்' என்று சொல்லப்படுறவர். இவரோட 'KD' படம் முழுக்க ஆக்ஷன், மாஸ் அம்சங்களோட வர இருக்கிறது. ஏற்கனவே இந்தப் படத்திலிருந்து வந்த 'சிவா சிவா' மாதிரியான பாடல்கள் பெரிய ஹிட் ஆகி, படத்துக்கு நல்ல ஹைப் உருவாக்கியிருக்கிறது.
இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு ஜானரில் இருந்தாலும், மோதல் ரொம்ப சுவாரஸ்யமாக மாறியிருக்கிறது. ஒரு பக்கம் பெண்கள் மையக் கதையுடன் சமந்தா, இன்னொரு பக்கம் மாஸ் ஆக்சன் ஹீரோவாக துருவா சர்ஜா. அதனால் யார் பாக்ஸ் ஆபிஸில் மேலோங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இதையும் தாண்டி, இது வெறும் இரண்டு நடிகர்களின் போட்டி மட்டும் இல்ல. பான்-இந்தியா அளவில் யாருக்கு அதிக ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது என்பதையும் இந்த ரிலீஸ் காட்டப்போகிறது. சமந்தாவுக்கு பல மொழிகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் துருவா சர்ஜாவுக்கும் கன்னட ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருக்கிறது.
மொத்தத்தில் பார்த்தால், ஏப்ரல் 30 ஒரு சாதாரண நாள் இல்லை. இரண்டு பெரிய படங்கள் நேருக்கு நேர் மோதும் நாள். சமந்தாவின் கம்பேக் வெற்றி அடையுமா? இல்ல துருவா சர்ஜாவின் மாஸ் வெல்லுமா? என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications