இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகும் சமந்தா? கணவராக போகிறவர் இந்த இயக்குநரா?
சென்னை: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா தற்போது தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்குப் பிறகு, சமந்தா பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா, தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
சமந்தா, நாக சைதன்யாவுடன் பிரிந்த பிறகு, படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, பாலிவுட்டில் வெளியான 'சிட்டாடெல்' என்ற தொடரில் நடித்தார். இந்த தொடரில் வருண் தவான் உடன் இணைந்து நடித்த சமந்தா, கதாபாத்திரத்திற்காக நிறைய உழைப்புகளையும் போட்டார். இருவரும் இணைந்து நெருங்கி நடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமந்தா, பிரபல இயக்குனர் ராஜு நிடுமூருவுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியபடி உள்ளன. இருவரும் 'ஃபேமிலி மேன்' தொடரில் இணைந்து பணியாற்றிய போது நெருக்கமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த தொடரில் சமந்தா நடித்திருந்தா், ராஜு நிடுமூருதான் இயக்கியிருந்தார்.
ராஜு நிடுமூரு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பவராகும். இந்த நிலையில்தான் இவர்களின் நெருக்கம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு பதிவில், நம்பகமான வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் வேண்டும் என்றும், தனது தொழிலில் வெற்றி பெற விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிவு, அவர் ராஜு நீடுமூரியை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற வதந்திகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து இருவரில் யாரும் அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலையும் வெளியிடவில்லை.
கடந்த வாரம் நடைபெற்ற சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணத்தில் பாலிவுட், கோலிவுட் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த இந்த திருமணத்தில், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண போஸ்ட்களை பார்த்த சமந்தா ரசிகர்கள் பலரும் சோபிதாவை திட்டி தீர்த்து வருகிறார்கள். இது துரோகம் என்று வசைமாரி பொழிகிறார்கள். இதற்கு பதிலடியாக சமந்தா தனது 2வது திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தான், இயக்குநருடனான இந்த திருமண வதந்தி சமந்தா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஆனால் சில ரசிகர்களோ, ஏற்கனவே திருமணமானவருடன் மறுமணம் வேண்டாம் என்று சமந்தாவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக அன்புக் கட்டளை போடுவதையும் பார்க்க முடிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications