Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் சமுத்திரகனியின் மனைவி யார் தெரியுமா? கையில் பரிசுகளோடு மகள்.. பெருமையோடு அவரே வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சமுத்திரகனி உதவி இயக்குனராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சில நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக சமுத்திரகனி பணியாற்றி இருக்கிறார்.

Samuthirakani has posted a post about her daughter on her social media pages

இந்த நிலையில் சமுத்திரக்கனி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தன்னுடைய மகள் குறித்து நெகிழ்ச்சியோடு பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இது அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடிகர் சமுத்திரக்கனி ராஜபாளையத்தில் பிறந்து அங்குள்ள கல்லூரியில் இளங்கலை பட்டம் பிடித்து பிறகு தான் ஒரு நடிகராக வேண்டும் என்று பெரும் கனவுகளோடு துணை இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி பல போராட்டங்களை தாண்டி ஒரு இயக்குனராக உருமாறி பல திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருந்த நிலையில் தான் தன்னுடைய கனவில் லட்சியமான நடிப்பு நோக்கி நகர்ந்து இருக்கிறார்.

Samuthirakani has posted a post about her daughter on her social media pages

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த நடிகர் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தில் "கனகு" என்ற கேரக்டர் மூலமாக பலருடைய மனதில் நிலைத்து நிற்க தொடங்கினார். அதை தொடர்ந்து ஈசன், நீர்பறவை, சாட்டை, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி என பல ஹிட் திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலமாக தன்னுடைய கேரக்டரை ரசிகர்களின் மத்தியில் ஆழமாக பதிய வைக்க தொடங்கி விட்டார்.

அதிலும் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ரகுவரன் தந்தை அதாவது நடிகர் தனுஷின் தந்தையாக இவருடைய நடிப்பு பலருடைய மனதை கவர்ந்தது. கடுகடுவென இருக்கும் ஒரு தந்தைக்குள் எப்படி ஒரு பாசம் இருக்கும் என்பதை இந்த திரைப்படத்தில் தத்ரூபமாக காட்டி இருப்பார். சாட்டை திரைப்படத்தில் ஒரு நல்ல ஆசிரியராக பலருக்கும் முன்மாதிரியாக இருந்த சமுத்திரக்கனி அதைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் வில்லன் கேரக்டரிலும் நடித்து வந்தார்.

Samuthirakani has posted a post about her daughter on her social media pages

ஒரு நல்ல நடிகர் எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் அதை சிறப்பாக ஒவ்வொரு திரைப்படத்திலும் சமுத்திரக்கனி நிரூபித்து வருகிறார். அதிலும் ரஜினி முருகன் திரைப்படத்தில் ஏழரை மூக்கன் கேரக்டரில் பலருடைய திட்டுகளை வாங்கி இருந்த சமுத்திரக்கனி விசாரணை திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் முத்துவேலாக மிரட்டி இருப்பார். இந்த திரைப்படத்திற்காக இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது.

அதுபோல ஆண் தேவதை, பெட்டிக்கடை, நாடோடிகள் 2 ,சங்கத் தலைவன் என பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் பலருடைய மனதை கவர்ந்திருந்த சசிகுமார் சமீபத்தில் வெளியான விமானம் திரைப்படத்தில் பலருடைய அனுதாபங்களை பெற்று இந்த திரைப்படத்தின் முடிவில் பலரையும் கண் கலங்கி அழ வைத்திருப்பார். இப்படியாக தன்னுடைய வாழ்க்கையில் வெற்றியோடு பயணித்துக் கொண்டிருக்கும் சசிகுமார் தன்னுடைய மகள் குறித்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Samuthirakani has posted a post about her daughter on her social media pages

அதிலும் தன்னுடைய மகள் ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட் நிற்பது போன்று கையில் பரிசுகளோடு இருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு "வாழ்த்துக்கள் மகளே நீ இன்னும் வெல்வாய்" என்று அந்த புகைப்படத்திற்கு சமுத்திரக்கனி கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த பதிவு அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது. அதோடு சமுத்திர கனியின் குடும்ப புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுபோல நடிகர் சமுத்திரக்கனி சினிமாவில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியிலும் சில சீரியல் களில் நடித்தும், இயக்கியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் 1998 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சில நிஜங்கள் சில நியாயங்கள் என்ற நிகழ்ச்சியில் நிருபராக இவர் நடித்திருக்கிறார் அதுபோல மர்மதேசம், எதுவும் நடக்கும், குகன், அரசி, 7 C, சித்தி 2 போன்ற சில சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்

அது மட்டும் அல்லாமல் கே பாலச்சந்திரனோடு பாச பாசங்கள், குணங்களும் ரணங்களும், அண்ணி, எங்கிருந்தோ வந்தாள், தேன் மொழியாள் என பல சீரியல்களையும் இவர் இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வம்சம் சீரியலில் இடம் பெற்ற சுவடு சுவடு என்ற பாடலை சசிகுமார் பாண்டியராஜோடு சேர்ந்து பாடியும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற தங்கவேட்டை, செல்வி ,அரிசி போன்ற நிகழ்ச்சிகளையும் இவர்தான் இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+