சாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான் "அது" கிடைக்குமாம்!
சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சம்யுக்தா வெளியே வந்தபிறகு, யாருக்கு டைட்டில் கிடைக்கும் என்பதை கணித்துக் கூறியுள்ளார்.
அவரைத்தான் தனக்குப் பிடிக்கும் என்றும் அவருக்குத்தான் டைட்டில் கிடைக்கும் என்றும் வெளிப்படையாக சொல்லியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த வீட்டுக்குள் சண்டை போட்ட ஆரியை பற்றியும் வெளிப்படையாக கூறியிருக்கிறார் .இந்த வீடியோஸ் தான் வைரலாக பரவி வருகிறது.

ஆரியுடன் சண்டை
கடந்த வாரம் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த சம்யுக்தா இவரும் ஆரியும் போட்ட சண்டையையும் ஆரியைப் பற்றி இவர் பேசிய வார்த்தையும் ரசிகர்கள் மனதில் வைத்து தான் இவரை இந்த வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் .அவர் மீண்டும் அதைப் பற்றி இந்த மாதிரி பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆரியின் வளர்ப்பு சரியில்லை
ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று சம்யுக்தா பேசிய பேச்சுதான் அவர் வெளியே வருவதற்கு காரணமாக இருந்தது .ஆனாலும் வெளியே வந்த பிறகும் கொஞ்சமும் அடங்காமல் அவர் ஜாலியாக என்ஜாய் பண்ணி கொண்டிருக்கிறார். அதை அப்படியே வீடியோக்களாக எடுத்து சமூக வலைத் தளங்களிலும் பரப்பியும் வருகிறார்கள் .இவர் பேசிய வீடியோக்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது .

இது வேற
இந்த வீட்டிற்குள் அங்கு இருப்பதும் நீங்கள் வெளியே இருந்து பார்ப்பதும் வேறுவிதமாக இருக்கிறது. அந்த வீட்டிற்குள் வெளியில் இருந்து பார்ப்பது போல அங்கு எதுவும் நடக்கவில்லை .சும்மா கேஷுவலாக தான் எல்லோரும் இருந்து கொண்டிருக்கிறார்கள் .அது இந்த அளவிற்கு வெளியே காட்டப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

ஜாலியா இருக்கு
அதுமட்டுமல்லாமல் அவர்கள் அனைவரும் ஒரு ஸ்கூல் லைஃப் பில் இருப்பதுபோலத்தான் ஜாலியாகவும் இருக்கிறோம் .கோபம் என்பது அனைவருக்கும் இயல்பு தான் அது சில நேரங்களில் வெளிப்படும் அடுத்த நிமிடமே அதை மறந்து ஜாலியாக பேசி விடுவோம் .ஒரு குடும்பம் போல தான் அங்கு எல்லோரும் இருக்கிறோம். ஆனால் வெளியே தான் நீங்கள் இந்த அளவிற்கு அதைப் பார்த்து எமோசனல் ஆகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆஜித்தே வெல்வார்
அதுமட்டுமல்லாமல் அந்த வீட்டிற்குள் முழு திறமையும் தகுதியும் இருப்பது ஆஜித் தான். அவருக்கு தான் டைட்டில் வின்னர் ஆகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதிகமாக பேசுவது இல்லை. ஆனாலும் பேசினால் நன்றாக தான் பேசுவார் அதுவுமில்லாமல் அவருக்குள் நிறைய திறமைகள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

பாலாஜியும் நல்லா விளையாடுறார்
ஆஜித் மட்டுமல்ல பாலாவும் நன்றாகவே விளையாடுகிறார். அவருக்கும் ஏகப்பட்ட திறமைகள் இருக்கிறது அவர் கோபப்படுவார். ஆனால் அதை சட்டென்று மறந்துவிடுவார் அதுவும் யாராவது தூண்டி விடாமல் அவர் கோபப்பட மாட்டார் என்று அவரையும் நல்லாவே புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அதிலயும் சிலர் ஆரிய பற்றி கேட்டுதான் வருகிறார்களாம்.

2 நாள் ரெஸ்ட்
இவர் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்து யாரிடமும் பேசவில்லையாம். அதன் பிறகு தான் ஆன்லைனில் வந்திருக்கிறார் ஆன்லைனில் இவர் வந்ததும் அனைவரும் இவரிடம் கேட்பது அதை பற்றி தான் அதற்குப் பிறகுதான் இவர் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த கடைசி வார எபிசோடுகளை மட்டும்தான் இவர் பார்த்து இருந்தாராம்.

மீட் பண்ணலாம்
அதில்தான் அங்கே நடப்பதற்கும் வெளியே காட்டுவதற்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் .ரசிகர்கள் இந்த அளவிற்கு கோபப்படுவதற்கு அங்கு ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார் .நான் வெளியே வரும் போது கூட ஆரியிடம் அனைவரும் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு ஒன்றாக மீட் பண்ணலாம் என்று கூறிட்டு தான் வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications