Sanam Shetty: விஜய் பற்றி ஜூலி பேசிய 2 வீடியோ.. பதிலடியாக சனம் ஷெட்டி கேட்ட கேள்வி.. அடுத்த பஞ்சாயத்து
சென்னை: தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் பேசிய ஒரு "குட்டி ஸ்டோரி" பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. வேலூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் கூறிய ஜல்லிக்கட்டு உவமைக்கதை தான் இந்த பரபரப்பின் மையப்புள்ளி. அந்த கதையை அடிப்படையாக கொண்டு ஜூலி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்கு தற்போது நடிகை சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளதால் விவாதம் மேலும் சூடுபிடித்துள்ளது.

விஜய்யின் "ஜல்லிக்கட்டு" குட்டி ஸ்டோரி
வேலூரில் நடந்த கூட்டத்தில் விஜய் தனது பேச்சை தொடங்குவதற்கு முன்பே ஒரு உவமைக் கதையை கூறினார். ஒரு பரபரப்பான சாலையில் ஜல்லிக்கட்டு முரட்டுக் காளை சீறிக் கொண்டு நின்றது. மக்கள் அதை அடக்க முடியாமல் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
அன்றைய தினம் காளையை அடக்கும் அனுபவசாலிகள் அந்த ஊரில் இல்லை. அவர்களுடன் இருப்பவர்கள் தான் அனுபவசாலிகள் என்று கூறி காளையை அடக்க முயன்றனர். ஆனால் காளை அவர்களை இடித்துத் தள்ளியது. அந்த நேரத்தில் ஒரு சின்ன பையன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு காளையை நோக்கி சென்றான். ஏற்கனவே காளையிடம் முட்டு வாங்கியவர்கள், "நாங்களே அனுபவசாலிகள்... எங்களாலே முடியல... நீ போய் செத்துப் போயிடாதே" என்று எச்சரித்தனர்.
ஆனால் அந்த பையன் காளைக்கு அருகே சென்று, தனது பாக்கெட்டில் இருந்த இரண்டு புல்லு கட்டுகளை எடுத்துக் காட்டினான். உடனே காளை பசியில் புல்லை சாப்பிடத் தொடங்கியது. அதை மெதுவாக தடவி வயல்வெளிக்குக் கொண்டு போய்விட்டான்.
அதை பார்த்த அனுபவசாலிகள் தலைகுனிந்து நின்றனர். ஒரு பெரியவர் அந்த பையனை பார்த்து "எப்படி காளையை அடக்கியாய்?" என்று கேட்டார். அதற்கு அந்த பையன்,
"அது கோபத்தில் இல்லை... பசியில் இருந்தது போலத் தெரிந்தது... அதனால்தான் புல் கொடுத்தேன்" என்று சொன்னான்.
இதன் அரசியல் பொருளை நேரடியாக விளக்கிய விஜய் - அந்த காளை தான் தமிழ்நாடு அரசியல் களம்... அந்த பெரியவர் மக்கள்... அந்த சிறுவன் தான் தமிழக வெற்றிக் கழகம்... என்று கூறியதும் கூட்டத்தில் கைதட்டல் முழங்கியது.
அனுபவம், வயது, பெரியவர்-சின்னவர் என்பதல்ல முக்கியம். பிரச்சனையை யார் எப்படி அணுகி தீர்வு காண்கிறார்கள் என்பதே முக்கியம் என்ற மெசேஜை அவர் சொல்ல முயன்றார்.
ஜூலியின் கேள்வி
விஜயின் இந்த கதையை நேரடியாக குறிப்பிட்ட ஜூலி, வீடியோவில் கேள்வி எழுப்பினார்: "வேலூரில் ஜல்லிக்கட்டு காளை பற்றி குட்டி கதை சொன்னீர்கள் அண்ணா... சாலை ஓரம் ஒரு காளை நின்றது... அதற்கு ஒரு குழந்தை புல்லு கட்டு கொடுத்து ஓரமாக விட்டது என்று சொன்னீங்க. ஆனால் உங்க கட்சியில் இருக்கிற பாதி பேர் சின்னவங்க. நீங்க சொல்றதை வேதவாக்கு என்று நம்பி, உண்மையிலேயே ஜல்லிக்கட்டு காளை முன்னாடி புல்லு கட்டு கொண்டு போய் நீட்டுனா என்ன ஆகும்? அப்படி ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு ஏற்க போறீங்களா?"
அதோடு நிற்காமல், "இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த எங்க யாருக்கும் தெம்பு இல்ல. உங்களால போன உயிர் 50-50ஆக இருக்கட்டும்... அதை 500 ஆகிடாதீங்க அண்ணா" என்று அவர் கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விஜய் கூட்டத்தின் போது உயிரிழந்த இளைஞர்களை நினைவுபடுத்தும் விதமாகவே இந்த வரிகள் பேசப்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் ஜூலிக்கு எதிராக விமர்சனம் தொடங்கினர்.
சனம் ஷெட்டி பதிலடி
இந்த சூழலில் நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோ புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. "யாரோ ஏதோ சொல்லிட்டாங்கன்னு அதை அப்படியே ஃபாலோ பண்ணுனா இப்படித்தான் நடக்கும். பேசுங்க... ஆனா நீங்க உங்க சொந்த கருத்தை பேசுங்க. ஜூலி, உங்களுக்கு தான் இத... உங்க மேல இருக்குற அக்கறையில்தான் சொல்லுறேன்... Be Your Self..." என்று தனது டி-ஷர்டில் இருந்த "Be Your Self" எழுத்துக்களை காட்டி தொடங்கிய அவர்,
"அப்படி என்ன தான் சொல்லிட்டாங்க தளபதி? ஒரு குட்டி கதை சொன்னார். தமிழ்நாடு என்பது ஒரு ஜல்லிக்கட்டு காளை மாதிரி. அனுபவமே இல்லாம நாங்க வந்திருக்கோம்... அனுபவ இல்லன்னு பார்க்காதீங்க, நம்பி ஓட்டு போடுங்க அப்படித்தானே சொல்லுவாங்க. முழு ஸ்பீச்சை பார்த்து தான் பேசுறீங்கலா? இதில் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் பண்ண எதுவும் இல்லையே.
நீங்க சரி... ரசிகர்கள் அவர் பேசியதை கேட்டு காளை மாடு பக்கத்தில் போய் விடக்கூடாது என்று நல்ல அக்கறையில சொல்றீங்கன்னா சரி. ஆனால் அது இல்ல... நீங்க அவரை பர்சனலா அட்டாக் பண்ணுறதுக்காக தான் இப்படி பேசுறீங்க. 50லிருந்து 500 ஆகிட கூடாதுன்னு சொல்றீங்க... அப்புறம் இன்னொரு வீடியோ போடுறீங்க... இது எல்லாமே தேவையில்லாத வேலை. Pure & Pure Personal Attack - ஜூலி." என்று கடுமையாக விமர்சித்தார்.
-
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?











Click it and Unblock the Notifications