அகால மரணம் அடைந்த நடிகை சனம் ஷெட்டியின் சகோதரர்.. உருக்கமாக வெளியிட்ட பதிவு.. குவியும் ஆறுதல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சனம் ஷெட்டியின் சகோதரர் விபத்தில் உயிரிழந்ததாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமாக பதிவு வெளியிட்டிருக்கிறார். அதோடு தன்னுடைய சகோதரர் பற்றிய பல நினைவுகளையும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விடுகிறார்கள். ஆனால் எதிர்பார்க்காத விதமாக திடீரென அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் அப்போது கூட ரசிகர்கள் இது அன்ஃபேர் எவிக்ஷன் என்று கூறி இருக்கிறார்கள். அதுபோல ஒருவர்தான் நடிகை சனம் ஷெட்டி. சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அழகி போட்டியில் வெற்றி
அதற்கு முன்பு கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்திய அழகி போட்டியில் டைட்டில் வெற்றி பெற்று இருந்தார். மாடலும் நடிகையுமான சனம் ஷெட்டி முதல் முறையாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அம்புலி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகி ஆனார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து மாயை, தொட்டால் விடாது, விலாசம், கதம் கதம் உட்பட பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு எந்த படமும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.
வெற்றி கிடைக்கவில்லை
இதனால் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து போட்டி போட்டு வருகிறார். சமீபத்தில் கூட ஜனநாயகம் திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி உதவி இயக்குனர் ஒருவர் கடைசி வரைக்கும் வாய்ப்பே தராமல் ஏமாற்றி விட்டார் என்று வருத்தமாக வீடியோ வெளியிட்டிருந்தார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வருகிறார்.
நடிகை சனம் ஷெட்டி சகோதரர் மரணம்
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சோகமான செய்தியை பகிர்ந்திருக்கிறார். அதில் தன்னுடைய இளைய சகோதரர் ராகுல் விபத்தில் உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார். அந்த பதிவில், "இது நானும் அப்பாவும் மீள முடியாத ஒரு இழப்பு. இதனை எப்போதும் எப்படியும் நியாயப்படுத்த முடியாது. என் அன்பான சகோதரர் ராகுல் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உனை இழப்போம். நீ இருக்கும் இடத்திலாவது அமைதியாகவும் சந்தோசமாகவும் இரு.
ரசிகர்கள் ஆறுதல்
நீ எங்களுடன் செலவிட்ட விலை மதிப்பில்லாத நேரத்திற்கும் உனது அன்பான இதயத்திற்கும் நன்றி. ஒருபோதும் விடை பெற முடியாது, விரைவில் உன்னை சந்திப்போம்" என்று அந்த பதிவை சோகமாக வெளியிட்டு இருக்கிறார். அதோடு தன்னுடைய தம்பியோடு எடுத்த சில புகைப்படங்களையும் அதில் பகிர்ந்து இருக்கிறார். சனம் ஷெட்டி எப்போதும் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து கொண்டிருப்பார். இப்போது சோகத்தில் அவர் வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications