உன்னாலே நான்... உனக்காகவே நான்... உம்மா கொடுத்து கொஞ்சி மகிழ்ந்த சாண்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய காதல் மனைவியின் பிறந்தநாளை ஊரடங்கு நேரத்தில் வித்தியாசமாக கொண்டாடி அசத்தியுள்ளார் டான்ஸ் மாஸ்டர் சாண்டி.

சாண்டியின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் தற்போது அவருடைய ரசிகர்களால் அதிகமாக இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வருகிறது.

காதலுக்கு, எந்த ஊரடங்கு வந்தாலும் சரி எந்த பிரச்சினைகள் வந்தாலும் சரி தங்களுடைய சந்தோசத்தை வெளிக்காட்டுவதற்கு வார்த்தைகள் தேவையில்லை என தன்னுடைய காதல் மனைவியின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி பார்ப்பவர்களை அசர வைத்திருக்கிறார்.

மாஸ்டர் சாண்டி

மாஸ்டர் சாண்டி

சாண்டியை பலருக்கும் மாஸ்டராக தெரிந்திருந்தாலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகதான் ரொம்ப வேகமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இவர் முதல் முறையாக 2005ஆம் ஆண்டு கலைஞர் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிரபல நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட சீசன் ஒன்றில் நடன இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கினார் .

நடனம்தான் வாழ்க்கை

நடனம்தான் வாழ்க்கை

அதற்கு பிறகு நடன நிகழ்ச்சிகளில் பலவற்றில் நடுவராக களம் இறங்கி தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். டான்ஸ் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்திருந்த இவருக்கு டான்ஸ் மூலமாக சினிமா துறையிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இவனுக்கு தண்ணில கண்டம் என்னும் திரைப்படத்தில் முதல்முறையாக நடிகராகவும் நடித்திருக்கிறார்.

பிக் பாஸ் மூலம் பிரபலம்

பிக் பாஸ் மூலம் பிரபலம்

அதற்கு பிறகு தான் 2019 ஆம் ஆண்டில் பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் வாய்ப்பு கிடைத்தது .இந்த பிக்பாஸ் வீட்டிற்கு சென்று பலர் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி இருந்தாலும் சிலரின் வாழ்க்கைத் டோட்டலாக மாறிவிட்டது .அதுபோலத்தான் சாண்டிக்கும் வாழ்க்கை நன்றாக மாறி இருக்கிறது .தொடர்ந்து பல படங்களில் நடன மாஸ்டராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தோல்வி அடைந்த முதல் திருமணம்

தோல்வி அடைந்த முதல் திருமணம்

என்னதான் வெளி உலகத்தில் இவர் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருடைய மனைவியான காஜல் பசுபதிக்கும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றிருந்தாலும் அதற்குப் பிறகு சில்வியா என்ற பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

லாலா பாப்பா

லாலா பாப்பா

இவர்களுடைய காதலுக்கு அடையாளமாக இவர்களுக்கு லாலா என்னும் பெண் குழந்தையும் இருக்கிறது .சாண்டியை போலவே பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் லாலா அந்த வீட்டிற்குள் சென்று அனைவரையும் அசத்திவிட்டார் .இவர்களின் பாசத்தை புரிந்து கொண்ட ரசிகர்கள் இப்ப வரைக்கும் கமெண்ட்களில் சாண்டியிடம் லாலாவை பற்றி தான் கேட்டு வருகின்றனர்.

2வது பாப்பா வந்தாச்சு

2வது பாப்பா வந்தாச்சு

தற்போது இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கிறார் சாண்டியின் மனைவிக்கு. அவரது பிறந்த நாளும் தற்போது கூடவே வர வீடே கலகலப்பாகி விட்டதாம். சாண்டியும் அவருடைய மகள் லாலாவும் சில்வியா வயிற்றில் முத்தத்தை கொடுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே கண்ணம்மா. "எனக்கென வாழும் ஒரு உயிர் ...என்னோட வெற்றிக்காகவே உருவாகும் ஒரு உயிர்"

உனக்காகவே நான்

உனக்காகவே நான்

"உன்னில் நான் உனக்காகவே நான். அன்பினை அறியாத என் வாழ்வில் வந்த வானவில் நீயடி ....லவ் யூ ஆல்வேஸ் கண்ணம்மா என பாச உணர்ச்சியில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் சாண்டி. இந்த போஸ்ட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் படு வைரலாக பரவி வருகிறது. மனைவியின் பிறந்தநாளுக்கு இந்த ஊரடங்கு நேரத்திலும் விமர்சையாக கொண்டாடி தன்னுடைய ரசிகர்களின் மனதில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சாண்டிக்கும் அவருடைய மனைவிக்கும் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+