அப்பா இறந்த போது என்னாச்சுன்னா..! ரெடின் கிங்ஸ்லி மீதான காதல் குறித்து சங்கீதா ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பா இறந்ததால் எனது குடும்பமே உடைஞ்சு பேச்சு, அப்போது எங்கள் வீட்டிற்கு வந்த ரெடின் கிங்ஸ்லி வீட்டையே கலகலப்பாக்கினார். அப்போதுதான் எனக்குள் அந்த ஸ்பார்க் வந்தது என சீரியல் நடிகை சங்கீதா உருக்கமாக தெரிவித்துள்ளார். அது போல் கிங்ஸ்லி மீது காதல் வயப்பட்டது எப்படி என்பது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சங்கீதா ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: பலருக்கு பலவிதமாக லவ் ஸ்பார்க் வரும். ஆனால் எனக்கு என் அப்பா இறந்த போதுதான், அவர் மேல அந்த காதல் ஸ்பார்க் வந்தது. என் அப்பா இறந்த போது அவர் ஊரில் இல்லை. இதனால் அப்பாவின் இறுதிச் சடங்கிற்கு கிங்ஸ்லியால் வர முடியவில்லை.

television sangeetha

பின்னர் ஊருக்கு வந்ததும் அப்பா, இறந்து 3 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்து என்னை பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது வீட்டில் இருக்கும் அனைவரும் சோகத்தில் மூழ்கியிருந்தார்கள். இவர் வீட்டிற்கு வந்த 5 நிமிடத்தில் அனைவரையும் கலகலப்பாக்கிவிட்டார். இதனால் அனைவரும் துக்கத்தை மறந்துவிட்டார்கள்.

அப்போதுதான் என் மனதிற்குள் அந்த லவ் ஸ்பார்க் வந்ததை நான் உணர்ந்தேன். என் அப்பாவும் இவரை மாதிரிதான் எப்போதும் கலகலப்பாக இருப்பார். பாசிட்டிவ்வாக இருப்பார். அதனால்தான் கிங்ஸ்லி நம் வாழ்க்கையில் இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் சொன்னது. அதுதான் அவர் மீது எனக்கு காதல் வந்த தருணம் என சங்கீதா தெரிவித்திருந்தார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் நண்பர்தான் ரெடின் கிங்ஸ்லி. இவர் கோலமாவு கோகிலா படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து டாக்டர், கான்ஜுரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

பெங்களூரில் வேலை பார்த்து வந்த இவர் திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் சென்னைக்கு வந்துவிட்டார். இவருக்கு 46 வயதாகியும் திருமணமாகாமல் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சீரியல் நடிகையும், சினிமா துணை நடிகையுமான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் ரெடின் கிங்ஸ்லி. இவர்களது திருமணம், பெங்களூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்பு நடந்தது.

இந்த திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டவுடன் நெட்டிசன்கள், ரெடினின் பணத்திற்காக சங்கீதா திருமணம் செய்து கொண்டார் என கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு சங்கீதா கூறுகையில், என்னிடமும் பணம் இருக்கிறது. அவரை திருமணம் செய்துதான் நான் பணம் சம்பாதித்து வசதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது போல் யாரும் பேசாதீர்கள் என தெரிவித்திருந்தார்.

சங்கீதா, ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். திருமணத்திற்கு பிறகு இருவரும் காமெடியாக வீடியோவை போட்டு வந்தனர். கடந்த ஆண்டு கர்ப்பமடைந்த சங்கீதாவுக்கு திரைபிரபலங்கள் கலந்து கொண்ட வளைகாப்பு நடந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ப்பு குறித்த வீடியோக்களையும் போட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+