Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரியல் மூலம் நடிகை சங்கவி கம்பேக்… நடிப்பு மட்டும் தானா? அரசியலும் இருக்கா? ஆரம்பமே அசத்தல் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ராசியான ஹீரோயின் என்ற அடையாளத்துடன் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சங்கவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் கம்பேக் கொடுத்திருக்கிறார். ஜெயா டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள 'பாளையத்து அம்மன்' என்ற பக்தி தொடரின் மூலம் சங்கவி மீண்டும் டிவி ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதுமே, சங்கவியை வரவேற்கும் ரசிகர்களின் உற்சாகம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் "இது வெறும் நடிப்பு கம்பேக்கா... இல்ல அரசியல் என்ட்ரியா?" என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழ ஆரம்பித்திருக்கிறது.

Sanghavi TV serial Jaya TV Vijay

விஜய்க்கு ராசியான ஹீரோயின் சங்கவி

குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்த விஜய், 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் ஹீரோவான போது, அவருடன் ஜோடியாக நடித்தவர் சங்கவி. அதன்பிறகு ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே போன்ற படங்களில் விஜய் - சங்கவி ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கட்டத்தில் "விஜய்க்கு சங்கவி தான் லக்கி ஹீரோயின்" என்ற பேச்சே பரவலாக இருந்தது.

தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்த சங்கவி, திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்தார். ஆனால் கர்ப்பமான பிறகு நடிப்பில் இருந்து ஓரங்கட்டிக் கொண்டார். தற்போது அவருக்கு சான்வி என்ற ஐந்து வயது மகள் இருக்கிறார்.

பாளையத்து அம்மன் மூலம் மீண்டும் சின்னத்திரை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் நடிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ள சங்கவி, ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'பாளையத்து அம்மன்' என்ற பக்தி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புரோமோ வீடியோ வெளியானதும், "அட நம்ம விஜய் பட ஹீரோயினாச்சே" என்று ரசிகர்கள் ஆச்சரியமாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அஜித் குமாருடன் சேர்ந்து நடித்திருந்தாலும், விஜய் - சங்கவி ஜோடிக்கிடையேயான கெமிஸ்ட்ரி தான் அதிகம் பேசப்பட்டது. அதனால் தான் இப்போது சீரியலில் பார்த்ததும், பலருக்கு விஜய் படங்கள் தான் நினைவுக்கு வருகிறது.

ஜெயா டிவி, அதிமுக

இத்துடன் ஒரு புதிய விவாதமும் கிளம்பியுள்ளது. சங்கவி நடிக்க இருக்கும் ஜெயா டிவி, அதிமுகவுடன் தொடர்புடைய தொலைக்காட்சி என்ற காரணத்தால், "சீரியல் நடிப்பு அப்படியே அரசியல் பிரச்சாரமாக மாறுமா?" என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதிலும், வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிடப் போகிறார் என்ற அறிவிப்புக்குப் பிறகு, இந்த சந்தேகம் இன்னும் அதிகமாக பேசப்படுகிறது. விஜய்க்கு ராசியான ஹீரோயினாக ரசிகர்கள் நினைக்கும் சங்கவியை, அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவார்களா என்ற கிசுகிசுவும் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "234 தொகுதிகளிலும் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்" என்று கூறியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்களை பிரச்சாரத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஒரு பக்கம், "பெரிய திரை நடிகர்கள் சின்னத்திரைக்கு வருவது இப்போது சாதாரண விஷயம் தான். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரே சீரியலில் நடித்திருக்கிறார்" என்று சிலர் கூறுகிறார்கள்.

மற்றொரு பக்கம், "ஜெயா டிவி சீரியல் என்றாலே அரசியல் பின்னணி இருக்கும். சங்கவி வெறும் நடிகையாக மட்டும் வருகிறாரா, இல்ல எதிர்காலத்தில் அரசியல் மேடையிலும் அவரை பார்க்கப் போகிறோமா?" என்ற கேள்விகளும் எழுகிறது.

பாளையத்து அம்மன் மூலம் கம்பேக் குறித்து சங்கவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள போஸ்ட்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். "செம கம்பேக்", "உங்களை மீண்டும் பார்க்க காத்திருந்தோம்" என்ற கருத்துகளே அதிகம்.

இந்த கம்பேக்குக்கு முதல் ஆளாக மனதார வாழ்த்து தெரிவித்திருப்பது நடிகை வனிதா விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கவியின் இந்த புதிய பயணம், இப்போது வரை நடிப்புக்கான கம்பேக் என்றே தெரிகிறது. ஆனால் சினிமாவும் அரசியலும் கலக்கும் தமிழக சூழலில், "இது இத்தோடு நிற்குமா, இல்ல வேறொரு பாதைக்கு போகுமா?" என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பாளையத்து அம்மன் தொடர் ஒளிபரப்பாக தொடங்கிய பிறகுதான், சங்கவியின் இந்த கம்பேக் சின்னத்திரையிலேயே முடிவடையுமா... இல்ல அரசியல் அரங்கத்திற்கும் நீளுமா என்பதற்கான பதில் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+