அண்ணாமலை அசோக் போல்! நண்பனின் வீட்டை இடித்த ஆர்யா! வெகுண்ட சந்தானம்! புதிய வீட்டை கட்டி கிரகபிரவேசம்
சென்னை: நடிகர் ஆர்யா இடிக்கச் சொன்ன இடத்திலேயே புதிய வீட்டை கட்டி கிரகபிரவேசத்தை நடிகர் சந்தானம் நடத்தினார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். சந்தானம் வீட்டை ஆர்யா இடிக்கச் சொன்னது ஏன், புதிய வீடு கட்டியதன் பின்னணி என்ன என்பதை காணலாம்.
தமிழ் சினிமாவில் நடித்து வரும் காமெடியன்கள் தங்களுக்கென ஒரு டிராக்கை வைத்துள்ளார்கள். அதன்படி காமெடி ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார்கள். அந்த வகையில் 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த காமெடியன் சந்தானம்.

இவரது பாடி மாடுலேஷனே சிரிப்பை வரவழைத்துவிடும். விஜய் டிவியில் லொள்ளு சபா எனும் நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு வந்தவர். இவரை சிம்புதான் அறிமுகப்படுத்தினார். எனவே எந்த மேடையிலும் சிம்பு பெயரை சந்தானம் சொல்லாமல் இருக்கவே மாட்டார்.
காமெடியன்
ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்த சந்தானம், ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் சிலருடன் இணைந்து காமெடியும் செய்து வருகிறார். "கண்ணா லட்டு தின்ன ஆசையா", "அறை எண் 305இல் கடவுள்", "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்", "தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
டிடி நெக்ஸ்ட் லெவல்
அந்த வகையில் அண்மையில் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் வெளியானது. இந்த படம் வெளியான முதல் நாளே வசூலில் பின்தங்கியது. இந்த படத்துடன் சூரியின் மாமன் படம் ரிலீஸானதால் அந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
பழைய வீடு
இந்த நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் புரமோஷனின் போது, சந்தானம் பேசுகையில், "ஒரு பழைய வீட்டுடன் இருந்த நிலத்தை வாங்கினேன். அதை புதுப்பிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த வீட்டை பார்த்த ஆர்யா, "இதெல்லாம் உனக்கு செட்டாகாது, இடித்துவிட்டு புதிய வீட்டை கட்டிவிடு" என்றார்.
மனைவியும் தாயும் அதிர்ச்சி
நானும் வீட்டில் எதுவும் சொல்லாமல் வீட்டை இடித்துவிட்டேன். ஒரு நாள் வெள்ளிக்கிழமை அதுவுமாக எனது தாயும் மனைவியும் புதிய வீட்டில் விளக்கேற்ற சென்று அங்கு வீடு இல்லாததால் அதிர்ச்சி அடைந்து போன் செய்தனர்" என தனக்கே உரிய பாணியில் கிண்டலாக தெரிவித்திருந்தார்.
பால் காய்ச்சிய சந்தானம்
இந்த நிலையில் அந்த இடத்தில்தான் சந்தானம் புதிய வீட்டை கட்டி நேற்று கிரகபிரவேசம் செய்துள்ளார். மேலும் புதிய வீட்டில் பால் காய்ச்சலையும் நடத்தியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஜெயிலர் 2 படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications