லொள்ளு சபா நிகழ்ச்சியில் சம்பளம் இவ்வளவு தான்! என் மகன் இப்போ 12th படிக்கிறான்.. ஆனால், நடிகர் சந்தானம் ஓபன்
சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சந்தானம் தன்னுடைய ஆரம்பம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் தான் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது தனக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதுபோல தன்னுடைய குடும்பத்தை பற்றியும் பேசி இருக்கிறார்.
நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமாகி இருந்தார். ஆரம்பத்தில் பல நடிகர்களோடு சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த சந்தானம் இப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவர் பற்றிய சர்ச்சைகளும், வதந்திகளும் அடிக்கடி பரவி வருகிறது. சந்தானம் மற்ற நடிகர்களை உருவ கேலி செய்து பிரபலமாகி கொண்டு இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது தான் பழைய மாதிரி காமெடி கேரக்டரில் நடிக்க மாட்டேன் இனி அடுத்தவர்களை உருவ கேலி செய்வது போன்ற கேரக்டரில் எனக்கு நடிக்க பிடிக்கவில்லை, ஆரம்பித்தில் நடித்தது பார்த்து இப்போ எனக்கே மாற்றம் தேவைப்படுகிறது என்று தோன்றுகிறது.

நடிப்பில் மாற்றம்
அதனால் நான் இனி புதுவிதமாக என்ன செய்யலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிக் கொண்டிருந்தார். அதேபோல தன்னுடைய ஆரம்பகால சம்பள விபரமும் பேசி இருக்கிறார் ஆரம்பத்தில் விஜய் டிவியில் எனக்கு லொள்ளு சபா நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பளம் தந்தாங்க. அது ஏதோ வாழ்க்கையை நடத்துவதற்கு ஓகேவாக இருந்தது. அதற்குப் பிறகு சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர் கிடைத்தது.
முன்மாதிரியான மகன்
இப்போது கதாநாயகனாக இருக்கிறேன். அது வேறு விதமாக என்னுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் இப்போது உள்ள தலைமுறைகளிடம் நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது. என்னுடைய மகன் இப்போது பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். என்னுடைய மகன் தான் எனக்கு பல நேரங்களில் முன்மாதிரியாக இருக்கிறார். அவர் வீட்டில் பேசும் வார்த்தைகளை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
சந்தானம் விளக்கம்
இப்போது ட்ரெண்டை பிடிப்பதற்கு என்னுடைய மகன்தான் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அதுபோல சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் "கோவிந்தா கோவிந்தா" பாடல் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பாடல் பெருமாளை அசிங்கப்படுத்துவதாக இருக்கிறது என்று சந்தானம் மற்றும் பட குழுவினர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அதோடு இந்த திரைப்படம் தமிழகத்தில் வெளியானால் திருப்பதி கோவிலுக்கு தமிழர்கள் யாரும் வரக்கூடாது என்றும் சிலர் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நான் பெருமாளை எந்த இடத்திலும் அசிங்கப்படுத்தவில்லை, நானே பெருமாள் பக்தர் தான். அப்படி இருக்கும் போது நான் அப்படி செய்வேனா? எனக்கு பெருமாள் ரொம்பவும் பிடிக்கும் அதனால் என்னுடைய படத்தில் அவருடைய பாடல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அதனால் தான் இந்த பாடல் வைக்கப்பட்டிருந்தது என்று சந்தானம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications