சந்தானம் சொன்ன ஒரு வார்த்தை.. வீட்டையே உடைத்து தள்ளிய ஆர்யா.. நட்புக்கு பின்னால் இப்படி ஒரு கதையா?
சென்னை: நடிகர் சந்தானம் நடித்திருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் சந்தானம் அணியினருடன் கௌதம் மேனன், செல்வராகவன் போன்றோர் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக நடிகர் ஆர்யா இருக்கிறார். இந்த நிலையில் நேற்று இந்த திரைப்படம் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. அப்போது ஆர்யா தன்னுடைய வீட்டை இடித்து நொறுக்கியது குறித்து சந்தானம் பேசியது பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.
சினிமாவில் சிலர் நடிப்பதை பார்த்து என்னப்பா இவங்க இப்படி இருக்குறாங்க விளையாட்டு பிள்ளையா திரியிறாங்களே என்று சொல்லி இருப்போம் ஆனால் நாங்கள் சினிமாவில் மட்டுமல்ல எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் நிஜத்திலும் இப்படித்தான் என்று சிலர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் நடிகர் ஆர்யா செய்த செயலை சமீபத்தில் நடிகர் சந்தானம் போட்டு உடைத்து இருக்கிறார்.

தயாரிப்பாளர் ஆர்யா
நடிகர் சந்தானமும் ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள் பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தில் இவர்கள் கூட்டணியை யாரும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து இருக்க முடியாது. இருவரும் நிஜ நண்பர்களாக தான் திரையிலும் வாழ்ந்திருப்பார்கள். தன்னுடைய நண்பருக்காகவே டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்காக ஆர்யா தயாரிப்பாளராக மாறி இருக்கிறார்.
சந்தானம் பேட்டி
இந்த நிலையில் ஆர்யா குறித்து சந்தானம் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும்போது இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்யா என்னுடைய உயிர் நண்பன். சேட்டை திரைப்படத்தில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்திருப்போம். சேட்டை திரைப்படத்தில் எனக்கு காமெடி சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போட்டுட்டான். லிங்கா படத்தில் நான் ரஜினி சார் கூட நடிக்கும்போது, நீங்க காமெடி சூப்பர் ஸ்டார்னு கேட்டாரு. நான் அவர்கிட்ட ஆர்யா படத்துல போட்டுட்டான்னு சொன்னேன் உங்களை கேட்காமலா போட்டு இருப்பார் என்று ரஜினி சார் கேட்டாரு. இப்படி என்னை பல இடங்களில் மாட்டிவிட்டு இருக்கிறார்.
ஆர்யா செய்த செயல்
நான் சமீபத்தில் கூட ஒரு இடம் வாங்கினேன். அங்கு ஒரு பழைய வீடு இருந்தது. அந்த வீட்டை கொஞ்சம் வேலை பார்த்து அந்த வீட்டிலேயே நாங்கள் குடிபோகலாம் என்று நினைத்திருந்தோம். அந்த வீட்டிற்கு என்னுடைய அம்மாவும் மனைவியும் வெள்ளிக்கிழமை போய் விளக்கேத்துவாங்க. எப்படியும் அந்த வீட்டுக்கு தான் போகப் போறோன்னு அவங்க முடிவு பண்ணிட்டாங்க. அப்படி இருக்கும்போது நாங்க இப்போ இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒருநாள் ஆர்யா எங்க இருக்குன்னு கேட்டான்.

வீட்டையே காணவில்லை
அப்போ நான் இப்படி ஒரு வீடு வாங்கி இருக்கிறேன் என்று சொன்னேன். அப்போ வீட்டை வந்து பார்க்க வந்தான். வீடு பழசா இருக்கு மச்சான் இடிச்சிட்டு புதுசா கட்டுன்னு சொன்னான். நான் வேண்டான்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே ஒரு பாய்க்கு போன் பண்ணி வர சொன்னான். அவரும் பேசி முடிச்சிட்டாரு. திங்கள், செவ்வாய், புதன் மூணு நாளில் வீட்டை தரைமட்டமாக இடிச்சு எல்லாத்தையும் அள்ளிட்டு போயிட்டாங்க.
அம்மா சொன்ன வார்த்தை
எங்க அம்மா வெள்ளிக்கிழமை வழக்கம் போல அந்த வீட்டுக்கு விளக்கு ஏற்ற போயிருந்தாங்க. அப்போ வீடு இருந்த இடமே காணவில்லை என்று தேடிக்கொண்டு இருந்தாங்க. அப்புறம் தான் இடிச்ச விஷயத்தை அம்மாகிட்ட சொன்னேன். அவங்க படத்துல தான் இப்படி எல்லாம் பண்றீங்கனா நேரிலயும் இப்படித்தான் இருப்பீங்களான்னு கேட்டாங்க என்று சந்தானம் பகிர்ந்து இருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications