Kaatrin Mozhi Serial:சும்மா சும்மா கண்மணியை அடிக்கறா தீப்தி சும்மாவே நிக்கறான் சந்தோஷ்!
சென்னை: விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் வாய் பேச முடியாத கண்மணியை எதுக்கெடுத்தாலும் கை நீட்டி அடிக்கறா தீப்தி.
இதைப் பார்த்து சும்மா தீப்தி தீப்தின்னு அதட்டல் போடறதோடு சும்மா நிறுத்திக்கறான் சந்தோஷ்,. ரொம்ப கேவலமா இருக்குது இந்த கதை.
அப்புறம் தீப்தி கோபமா போகிறாள்.. பின்னாலேயே இவனும் போய் விடுகிறான். பின்னர் அந்த வாய் பேச முடியாத பெண்ணுக்கு நீதி எப்படி கிடைப்பது?

தீப்தி கண்மணி
தீப்தி சந்தோஷின் மாமா பெண். அவளின் அலுவலகத்தை கட்டி காப்பவன்தான் சந்தோஷ். அவன் அலுவலகத்தில் பால் ஊத்துபவள் கண்மணி. கண்மணி வாய் பேச முடியாத பெண். எப்போதும் இவளுக்கு பரிந்து பேசுவதும், தீப்தியிடம் பிறகு வாங்கிக் கட்டிக் கொள்வதும் சந்தோஷுக்கு வாடிக்கை. இருந்தாலும் சந்தோஷ் திருந்திய பாடில்லை. தீப்திக்கு கண்மணியை கண்டாலே பிடிக்காது.

அலுவலகத்தில் காபி
இதற்கிடையில் அலுவலகத்தில் காபி போட்டு தரும் வேலையையும் கண்மணிக்கு போட்டு தருகிறான் சந்தோஷ். சந்தோஷ் கண்மணிக்கு ஒற்றை ரோஜா கொடுத்தாலும் கண்மணிக்குத்தான் தீப்தி பொளேர் என்று அடி தருவாள். அப்போதும் சந்தோஷ் சிரத்தை இல்லாமல் தீப்தி என்று கோபமாக ஒரு சத்தம் போட்டுவிட்டு அத்தோடு நிறுத்தி கொள்வான். அவள் கோபமாக போய் விடுவாள். பின்னோடு இவனும் போய் விடுவான். பாவம் கண்மணியும் சிறிது நேரம் கழித்து கண்ணீரோடு போய் விடுவாள்.

போதை வாந்தி
சந்தோஷ் மீது உள்ள கோபத்தில் ஒரு நாள் தீப்தி தோழி வீட்டில் போய் மது அருந்தி விடுகிறாள். போதையில் இருக்கும் தீப்தியை அழைத்து வரும் சந்தோஷ், அவளை வீட்டுக்கு அழைத்து போக முடியாமல் கண்மணியிடம் சொல்லிவிட்டு கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்து செல்கிறான். அப்போது போதையில் இருக்கும் தீப்தி கண்மணி மீது வாந்தி எடுத்து விடுகிறாள். கண்மணி தனது பாவாடை தாவணியை தீப்திக்கு உடுத்தி விடுகிறாள்.

கண்மணிக்குத்தான் அடி
காலையில் போதை தெளிந்து எழுந்ததும் தான் அணிந்து இருக்கும் உடையைப் பார்த்துவிட்டு இவை டிரஸ்ஸையா நான் போட்டு இருக்கேன்னு சொல்லிட்டு கண்மணியின் கன்னத்தில் பொளேர்னு அடிக்கறா . அப்போதும் மடையன் மாதிரி சந்தோஷ் தீப்தி தீப்தின்னு அவ பின்னாடியே ஓடறான். கடுப்பா வருதுங்க.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications