சன் டிவி சீரியல் ஹீரோவை திருமணம் செய்த “லப்பர் பந்து” பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சனி சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் சந்தோஷ், லப்பர் வந்து திரைப்படத்தில் நடித்த நடிகை மௌனிகாவை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி அதில் காதலித்து திருமணம் செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க சீரியலில் கதாநாயகனாக நடித்துவரும் வெற்றி வசந்த் விஜய் டிவியில் பொன்னி சீரியல் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களுடைய எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. விரைவில் திருமணம் நடக்கும் என்று அறிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு ஜோடி தங்களுடைய காதலை அறிவித்திருக்கிறார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரைக்கும் ஜீ தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலை செந்தில்குமார் என்பவர் தான் இயக்கி இருந்தார். மனிஷாஜித் மற்றும் திவ்யா பத்மினி ஆகியோர் அந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்க சந்தோஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அந்த சீரியல் குடும்ப பின்னணியை கொண்ட காதல் தொடராக ஒளிபரப்பாகி வந்த நிலையில் அந்த சீரியல் ஹிந்தியில் வெற்றி பெற்ற 'துஜ்சே ஹை ராப்தா' என்ற கதையை தழுவி தான் தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அந்த சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதுபோல புதிய பார்வை என்ற ஷார்ட் பிலிமிலும் வித்தியாசமான கெட்டப்பில் சந்தோஷ் நடித்து இருந்தார். அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அண்ணா சீரியலிலும் நடித்து வந்தார்.

ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சந்தோஷ் instagram பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் பிளாக் ஷீப் வீடியோஸ், கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமான நடிகை மௌனிகாவை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்தோடு சில மாதங்களுக்கு முன்பு எங்கேஜ்மென்ட் நடைபெற்றது.

மௌனிகா சமீபத்தில் வெள்ளித்திறையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று சந்தோஷம் மற்றும் மௌனிகா இருவருடைய திருமணமும் குருவாயூரில் உள்ள கோவிலில் எளிமையாக நடைபெற்று இருக்கிறது. அப்போது அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டும் அந்த திருமண பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படத்தை சந்தோஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications