கனிகளிலே அவள் மாங்கனி.. புடவையில் புல்லரிக்க வைத்த சரண்யா துரோடி... வேற லெவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று கண்ணதாசன் பிறந்த நாளாச்சே.. அதையும் டச் செய்து சூப்பராக ஒரு போஸ்ட் போட்டு ரசிகர்களை கலகலப்பாக்கி விட்டார் சரண்யா துராடி.

வெயிலுக்கு இதமாக காட்டன் சேலையில் பார்ப்பவர்களுக்கு பயபக்தி ஏற்படுத்திய சரண்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

நேற்று கண்ணதாசன் பிறந்த நாள் என்பதால், "கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல் காலங்களில் அவள் வசந்தம்"... என்ற பாடல் வரிகளைப் போட்டு அந்த போஸ்ட்டை போட்டு அசத்தியுள்ளார் தமிழ்க் காதலியான சரண்யா.

மலர் டீச்சராய்

மலர் டீச்சராய்

இவருக்காக தான் கண்ணதாசன் அன்றே கணித்தாரோ என்று சொல்லத் தோன்றும் வண்ணம் கோடைக்கு தென்றலாய் மலராய்.. மலர் டீச்சர் போலவே மாறிய சரண்யாவை பார்த்து நெக்குருகி வருகிறார்கள் ரசிகர்களும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். காட்டன் புடவையில் ஸ்டிரிக்ட்டாக காணப்படும் டீச்சர்களைப் பார்த்தே பல மாதங்களாகி விட்டது மாணவர்களுக்கு.

மடிப்பு கலையாத புடவை

மடிப்பு கலையாத புடவை

இந்த சூழ்நிலையில் கையில் புத்தகம், ஹேண்ட் பேக், மடிப்பு கலையாத காட்டன் புடவை சகிதம் சரண்யா இருக்கும் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மீண்டும் ஊரடங்கு முடிந்து பள்ளி கல்லூரிகளுக்கு தாங்கள் செல்லும்போது இந்த மாதிரி டீச்சர் தான் தங்களுக்கு வர வேண்டுமென்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது கிளாஸ்மேட் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஜாலியாக கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர்.

நியூஸ் ரீடிங்

நியூஸ் ரீடிங்

ஆரம்பத்தில் புதிய தலைமுறை மற்றும் நியூஸ்7 செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய சரண்யாவிற்காகவே அவர் வரும் நியூஸ் சேப்டரை மட்டும் பார்க்க ரசிகர்கள் ஏராளம் உண்டு. அதே வரவேற்புடன்தான் விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடித்ததால் எளிதில் இவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.

புக்கா நினைச்சு தூக்குங்க

புக்கா நினைச்சு தூக்குங்க

கவியரசர் கண்ணதாசனுக்கும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுக்கும் நேற்று பிறந்தநாள் என்பதால், அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக இவர் போட்ட போஸ்ட்டை பார்த்து இவருக்கு தான் பிறந்தநாள் என நினைத்து அவரை வாழ்த்தி கவிதை மழை புரிந்து வருகின்றனர். சில ஏடாகூட கமாண்டர்கள் "ஹேண்ட் பேக்கா நான் இருந்தா தோளுல தான் தொங்கிடுவேன் "...என்று பாட்டுப் பாடியும் அந்த ...புக்கா நினைச்சு என்னை தூக்கி வச்சுக்குங்க .....என்று ஏங்கியும் புலம்பி வருகின்றனர்.

மெல்லிய மென்மை

மெல்லிய மென்மை

மெரூன் கலர் சேலையில் மென்மையான புன்னகையுடன் மெல்லிய கூந்தலை வருடியபடி இவர் பார்க்கும் பார்வை ரசிகர்களை என்னவோ செய்யத்தான் செய்கிறது. இவர் இதே கெட்டபுடன் டீச்சராக போனால் மலர் டீச்சர்க்கு இருக்கும் கிரேசை ரிப்ளேஸ் செய்துவடுவார் போல. அழகான சேலையுடன் ஹேண்ட்பேக் ,புக்கென அனைத்து காஸ்ட்யூமும் செட் ஆனாலும் குடை மட்டும் மிஸ்ஸிங். குடையும் இருந்தால் தமிழ் திரைக்கு மேலும் ஒரு அழகிய டீச்சர் கிடைத்து விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+