வரலட்சுமி வீட்டில் விசேஷம்.. வாழ்த்துக்கள் சொன்ன ராதிகா.. மகள் பற்றி நெகிழ்ந்த சரத்குமார்.. குவியும் வாழ்த்து
சென்னை : நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு அவருடைய தந்தையான சரத்குமாரும், ராதிகாவும் வாழ்த்துக்கள் கூறி போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். வரலட்சுமியோடு எடுத்த புகைப்படங்களை இவர்கள் இருவரும் பகிர்ந்து இருக்கிறார்கள். இதற்கு ரசிகர்கள் பலரும் வரலட்சுமிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
நடிகர் சரத்குமார் பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் பலருக்கும் பிரபலமானவர் தான் 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் 2கே கிட்ஸ்களுக்கும் பிரபலமான நபராக சரத்குமார் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு மட்டும் வயதே ஆகாதா? என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.

மாறாத இளமை
தான் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் கலக்கி இருக்கிறார். அதிலும் ஆரம்பத்தில் பல திரைப்படங்களை தயாரித்து இயக்கியும் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது ரேடான் ப்ரொடக்ஷன் நிறுவனத்தையும் கவனித்து வருகிறார். பல சீரியல்களையும் சரத்குமார் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சரத்குமாரின் முதல் மனைவி
அதேபோல நடிகர் சரத்குமார் நடிகை சாயாவை திருமணம் செய்திருந்தார். அவருக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். பிறகு சாயாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடல் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வரைக்கும் ராதிகா மற்றும் சரத்குமார் தம்பதி மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ராதிகாவோடு திருமணம்
இருவரும் அடிக்கடி பல பேட்டிகளிலும் கலந்து கொள்கிறார்கள். இருவரும் பல திரைப்படங்களிலும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். அதுபோல ஆரம்பத்தில் வரலட்சுமி ராதிகாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அதற்குப் பிறகு இப்போது அவரை புரிந்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
வரலட்சுமி திருமணம்
கடந்த வருடம் தான் வரலட்சுமிக்கு நிக்கோலாய் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. அதுவரைக்கும் தன்னுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த வரலட்சுமியின் என்கேஜ்மென்ட் புகைப்படம் இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதற்கு பிறகு திருமணம் எளிமையாக நடைபெற்றது. அதை அடுத்ததாக ரிசப்ஷன் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
வரலட்சுமியின் கணவர்
வரலட்சுமி கணவரோடு எடுக்கும் வீடியோவை அடிக்கடி சோசியல் மீடியாவில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதுபோல தன்னைப் பற்றிய வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று வரலட்சுமி பிறந்தநாள் அதற்காக சரத்குமார் தன்னுடைய மகளோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
நடிகர் சரத்குமார் போஸ்ட்
அதில், "அன்புள்ள வரு உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையில் என்றென்றும் ஏராளமான ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கட்டும். உங்கள் வாழ்க்கையில் உச்சத்தை அடையட்டும். உங்கள் எல்லா முயற்சிகளிலும் சிறந்து விளங்கட்டும். அன்பான அப்பாவின் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

நடிகை ராதிகா போஸ்ட்
அதேபோல ராதிகாவும் வரலட்சுமியோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "நமக்கு இடையில் எதுவும் வர முடியாது. நீ அனைவருக்கும் இணைப்பு பாலமாக இருக்கிறாய். நம்முடைய உணவு, சிரிப்பு, ஒன்றாக இருக்கும் நேரம் எல்லாமே இனிமையானது. ஆனால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அமைதியான வேலை சார்ந்த நபராக மாறிவிட்டாய். ஆனாலும் இன்னும் உன்னை சுற்றியுள்ள அனைவரையும் பாதுகாக்கும் நபராக இருக்கிறாய். உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறி இருக்கிறார். இந்த பதிவுக்கும் அதிகமான ரசிகர்கள் வரலட்சுமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications