அடுத்த சர்ச்சையை கிளப்பிய நடிகர் சரத்குமார்.. ரஜினிக்கு இணையான ஆளுனா “அவங்க”தானாம்.. யாரு தெரியுதா?
சென்னை: நடிகர் சரத்குமார் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
அதைத்தொடர்ந்து சரத்குமார் சூப்பர் ஸ்டார் என்று விஜய்யை தான் அழைத்ததற்கான காரணம் குறித்து விளக்கமும் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் அதைத்தொடர்ந்து புதியதாக சரத்குமார் அடுத்த சர்ச்சை பேச்சை பேசி இருக்கையில் அது குறித்த விவாதம் தொடங்கியிருக்கிறது.
நடிகர் சரத்குமார் முன்னணி ஹீரோவாக நடித்த பிரபலம் அடைந்திருந்த நிலையில் இப்போது சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் முக்கியமான கேரக்டராக நடித்து வருகிறார். அதுவும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தான் நடிக்கும் திரைப்படங்களில் தனக்கு மட்டுமே முக்கிய கேரக்டர் இருக்க வேண்டும் என்று நினைக்காமல் தனக்கு கீழே இருக்கும் சக நடிகர்களுக்கும் முக்கியமான கேரக்டர் இருக்க வேண்டும் என்று அதற்கு தகுந்த மாதிரியே நடித்து வந்தாலும் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் ஹீரோவாகவே அதிகமாக நடித்து வந்த சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு வெளியான வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜயின் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். அந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு சொந்தமாக இருந்த ரஜினிகாந்த் வயதாகி விட்டதால் சரத்குமார், விஜய்க்கு குறித்து இப்படி பேசி விட்டாரா? என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
அதற்கு நடிகர் சரத்குமார் நான் விஜய்யை அந்த மாதிரி அர்த்தத்தில் சொல்லவில்லை. சிறப்பாக நடிப்பவர்களே எல்லா மாநிலத்திலும் சூப்பர் ஸ்டார் என்று சொல்வது போலத்தான் நானும் சொன்னேன். இதை குறித்த விளக்கத்தை நடிகர் ரஜினிகாந்திடம் நான் கூறிவிட்டேன் என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனாலும் சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா பருந்து கதை சொன்னது கூட நடிகர் விஜய்க்காக தான் இருக்குமோ என்று ஒரு பேச்சு எழுந்து வந்தது.

அதையெல்லாம் இப்போதும் சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறி வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது நடிகர் சரத்குமார் அடுத்த சர்ச்சை பேச்சு பேசி இருக்கிறார். அதாவது நடிகர் சரத்குமாரின் மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் சினிமாவிற்குள் வந்து 45 வருடங்கள் ஆகிவிட்டதாம். தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்கள் அனைவரோடும் ஜோடியாக நடித்த ராதிகாவை நாட்டின் தலைசிறந்த நடிகையாகவே பார்ப்பதாக சரத்குமார் கூறியிருக்கிறார்.
அதோடு ராதிகா சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரை, ஓடிடி என அனைத்து நிலைகளிலும் ஒரு முக்கியமான நடிகையாக இன்று வரை பார்க்கப்படுகிறார். ரஜினியே சினிமாவிற்குள் வந்து 47 வருடமோ 48 வருடமோ ஆகின்றது. ஆனால் ராதிகா 45 வருடங்களாக ஒரு தலைசிறந்த நடிகையாக ரஜினிக்கு இணையாக ஒரு நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார் என்று நடிகர் சரத்குமார் பேசியிருக்கிறார். இது குறித்த விவாதங்கள் தற்போது அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications