Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரத்குமாருக்கு பெருமை சேர்த்த மகன்! உங்க மகன் ஜெயிச்சுட்டேன் என உருக்கம்! குவியுது வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் தனது மகன் ராகுல் சரத்குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவால் நெகிழ்ந்து போயிருக்கிறார். ராகுல், தான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தனது வெற்றிக்குக் காரணம் தனது தந்தை சரத்குமார் என்றும், அவரைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Sarathkumar radhika

சரத்குமாரின் சினிமா பயணம்

1986 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சரத்குமார் தனது திரைத்துறைப் பயணத்தைத் தொடங்கினார். சில படங்களில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்த பிறகு 1990களில் கதாநாயகனாக மாறினார். 'சேரன் பாண்டியன்', 'சூரியன்', 'நாட்டாமை','சூர்யவம்சம்' போன்ற படங்கள் சரத்குமாரின் நடிப்பில் பெரும் வெற்றி பெற்றன. அவர் தனது ஸ்டைலான தோற்றத்தாலும் அழுத்தமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.

அரசியல் பிரவேசம்

2007 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கி அரசியல் உலகில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கினார். இப்போது தன்னுடைய மனைவி ராதிகாவுடன் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சி இணைந்து இருக்கிறார்.

குடும்பத்தின் மீதான அன்பு

சரத்குமார் நடிகை சாயாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். பிறகு சாயாவேடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ராதிகா மற்றும் சரத்துக்குமார் தம்பதிக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார். மனைவி நடிகை ராதிகா மற்றும் மகள்கள் வரலட்சுமி, பூஜா, ரேயான் மற்றும் மகன் ராகுல் ஆகியோருடன் ஒரு அன்பான குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார். சினிமா மற்றும் அரசியல் பணிகள் இருந்த போதிலும் தனது குடும்பத்திற்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

ராகுலின் நெகிழ்ச்சியான பதிவு

"எனக்காக எல்லாவற்றையும் செய்த என் தந்தை என் சூப்பர்ஹீரோ. அவர் என் சிறந்த நண்பர், இருளில் என் வெளிச்சம். நான் யார் என்பதற்கான என் நினைவூட்டல்" என்று ராகுல் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். "நான் வெளிநாட்டிற்குச் சென்று படிக்க வேண்டும் என்பதற்காக எனக்காக தன் நேரத்தை தியாகம் செய்த ஒரு மனிதருக்கு நான் செய்ய வேண்டியது குறைந்தபட்சம் அவரை உலகின் மகிழ்ச்சியான மனிதனாக மாற்றுவதுதான்" என்று ராகுல் உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளார்.

கனவு நனவான தருணம்

"நேற்று ஒவ்வொரு மகனும் ஏங்கும் அந்தத் தருணம் எனக்குக் கிடைத்தது. என் தேர்வு முடிவுகளைப் பெற்றேன். நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஒரு தனித்துவமான வெற்றியை அடைந்துள்ளேன். அவருடைய முகத்தில் நான் கண்ட மகிழ்ச்சி என் நாளையும் வாரத்தையும் என் வாழ்க்கையையும் உருவாக்கியது" என்று தனது தேர்ச்சி குறித்து ராகுல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மகனின் வெற்றி

"அப்பா, நீங்கள் சரத்குமார், என்னுடைய டாடிப்பா, என்னுடைய மெட்ராஸ். நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். உங்கள் மகன் வெற்றி பெற்றுவிட்டான். லவ் யூ டாடிப்பா" என்று தனது தந்தைக்கு அர்ப்பணித்து ராகுல் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பலருடைய இதயங்களைத் தொட்டுள்ளது. சரத்குமார் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த தந்தையாகவும் திகழ்கிறார் என்பதை ராகுலின் பதிவு எடுத்துக்காட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+