நாட்டாமைனா சும்மாவா? பிறந்த நாளில் பட குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மாஸ் காட்டிய சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் தன்னுடைய 71 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அவர் நடித்த கொம்பு சீவி திரைப்படத்தின் குழுவினர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் டாப் கதாநாயகனாகவும் அரசியல் பிரமுகராகவும் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் ஆரம்பத்தில் வில்லனாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு கதாநாயகனாக மாறியிருந்தார். சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த சரத்குமார் இயக்கத்தில் நடித்த சேரன் பாண்டியன் திரைப்படம் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது அதற்கு பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த நாட்டாமை படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கொடுத்தது.

Sarathkumar Vijayakanth

90ஸ் நேரத்தில் சரத்குமார் அதிகமான திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அது அவருக்கே அமைந்தது போல சூப்பர் டூப்பர் வெற்றி கொடுத்தது. சூரியவம்சம், நட்புக்காக போன்ற படங்கள் எல்லாம் சரத்குமாரின் பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெற்றது. சரத்குமார் 90s காலகட்டத்தில் வெளியான திரைப்படங்கள் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் கூட ஏதோ முதல் முறை பார்ப்பது போல அதிகமான ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

Sarathkumar Vijayakanth

அந்த படங்களுக்கு நல்ல டிஆர்பி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரிய வம்சம் படம் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதனின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று அந்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் சரத்குமார் கூறியிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான 3BHK படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு பிறகு சரத்குமார் நடித்த "கொம்பு சீவி" திரைப்படமும் சூட்டிங் முடிந்துவிட்டது.

Sarathkumar Vijayakanth

இந்த திரைப்படத்தின் போஸ்டர் தான் இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கிறார். அவரின் அப்பாவாக சரத்குமார் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் விஜயகாந்துடன் சரத்குமார் நடித்து கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் பெரிய அளவில் பெயர் வாங்கினார்.

இப்போது விஜயகாந்தின் மகன் நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு அப்பாவாக சரத்குமார் நடித்திருக்கிறார். நேற்று சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு கொம்பு சீவி படத்தின் புதிய போஸ்டரை படம் சொல்லி வெளியிட்டு இருக்கிறது. அதில் கையில் கயிற்றுடன் ஆக்ரோஷமாக இருக்கும் சரத்குமாரை பார்த்ததும் இந்த திரைப்படம் பார்ப்பதற்கே மாஸா இருக்கிறதே என்று பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+