'அந்த' படத்துக்காக கெட்டுப்போன சாப்பாட்டை சாப்பிட்டு சரத்குமார் பட்ட அவஸ்தை.. மனம் திறந்த பிரபலம்
சென்னை: நடிகர் சரத்குமார் நடிக்கும் போது கெட்டுப் போன சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு பட்ட கஷ்டம் குறித்து இயக்குனர் விக்ரமன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சூரியவம்சம் திரைப்படத்தில் சரத்குமார் செய்த செயல் தான் அந்த சில தருணங்கள் எதார்த்தமாக இருந்தது என்று பகிர்ந்து இருக்கிறார்.

சிலர் வாய்ப்புக்காக எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்கொள்வார்கள். அந்த மாதிரி தான் சூரியவம்சம் திரைப்படத்தில் சரத்குமார் நடந்து கொண்டார் என்று இயக்குனர் பாராட்டி பேசி இருக்கும் வீடியோ பரவி வருகிறது.
நடிகர் சரத்குமார் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை விளம்பரங்கள் என எல்லா பக்கங்களிலும் அவருடைய முகம் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகர்களின் இவரும் ஒருவர். நடிகராக மட்டுமல்லாமல் ஒரு அரசியல் பிரபலமாகவும் சரத்குமார் இருந்து வருகிறார்.
அந்த கால கட்டத்தில் சரத்குமார் சினிமாவில் அறிமுகமாகி அதில் ஜொலிப்பதற்கு பல்வேறு போராட்டங்களையும், பிரச்சனைகளையும் தாண்டி தான் வந்திருந்தார். அது மட்டும் அல்லாமல் சில திரைப்படங்கள் ப்ளாப் ஆகி அவருடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பல பேட்டிகளில் பேசி இருக்கிறார்.

அதிரடி ஆக்சன் ஹீரோவான சரத்குமார் சில காலமாகவே தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வந்த காஞ்சனா 2, சென்னையில் ஒரு நாள், வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இப்போதும் பல திரைப்படங்களில் நாயகனாகவும் வில்லனாகவும் வெப் சீரிஸ்களிலும் விளம்பரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி விடுகிறார். இந்த நிலையில் சரத்குமார் பற்றிய புதிய தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது சரத்குமார் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சூரியவம்சம்.

இந்த திரைப்படம் இப்பவும் 90ஸ் கிட்ஸ்களின் நம்பர் ஒன் ஃபேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது. சின்னத்திரையில் இந்த சி திரைப்படம் வெளியானால் பல பேர் எப்போதும் கண்ணிமைக்காமல் பார்த்து பரவசமடைகிறார்கள். அந்த அளவிற்கு மனதை கவர்ந்த இந்த திரைப்படம் இயக்கியவர் விக்ரமன் தான். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சூரியவம்சம் திரைப்படத்தில் நடந்த சீன் குறித்து கூறியிருக்கிறார்.
அதாவது கல்யாண வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு முடித்து பிறகு சரத்குமார் மட்டும் தனியாக உட்கார்ந்து சாப்பிடுவார். அவருக்கு தேவயானி பரிமாறுவார். இந்த சீனுக்காக வைக்கப்பட்ட சாப்பாடு கெட்டுப் போய்விட்டதாம். ஆனால் அந்த சீன் நல்லா வரவேண்டும் என்பதற்காக சரத்குமார் வந்து சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு பிறகு கட் சொன்னதும் ஓடிப்போய் அந்த சாப்பாட்டை துப்பியதோடு நடந்ததைப் பற்றியும், சாப்பாடு கெட்டுப் போனது பற்றியும் தெரிவித்தார் என்று விக்ரமன் கூறியிருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications