அப்போ நான் யாருங்க? எப்படி இதுபோல சொல்லலாம்? பிரியங்காவை மிரட்டிய சரத்குமார்! மேடையில் வெடித்த பிரச்சனை
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போ பேசுபொருளாக இருக்குற நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடிச்சிருக்க 'டியூட்' படத்தோட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழா முழுக்க முழுக்க இளம் தலைமுறையின் மாஸ் கொண்டாட்டமாத்தான் இருந்தது. படத்துக்கு இசையமைச்சிருக்கிற சாய் அபயங்கர், அனிருத் வந்த அதே 'ஹைப்பில்தான்' இப்போ கோடம்பாக்கத்துல அடியெடுத்து வச்சிருக்காராம். குறிப்பா, இவருடைய மாஸ், க்ரேஸ் இப்போ பெண்கள் மத்தியில அதிகமாகப் பரவிட்டு இருக்கு!
இந்த இசை வெளியீட்டு விழாவை வழக்கம் போல விஜய் டி.வி-யின் செல்லப்பிள்ளை பிரியங்கா தான் தொகுத்து வழங்கினார். ஆனா, இந்த மேடையில பிரியங்கா போட்ட ஒரு 'ஜாம்பவான்' கேள்வியால, அவரே பெரிய நடிகரான சரத்குமாரிடம் வசமா சிக்கிக் கொண்ட சம்பவம் கலகலப்பைக் கூட்டியிருக்கு!

சரத்குமார் கொடுத்த பஞ்ச்
மேடைக்கு வந்த சரத்குமாரிடம், பிரியங்கா ஒரு கேள்வியைக் கேட்டார். அதுதான் இப்போ கிண்டலுக்கு உள்ளாகியிருக்கு:
"இந்த புதுத் தலைமுறை நடிகர்களுடன் நடிக்கும்போது, உங்களுடைய அனுபவம் எப்படி இருந்துச்சு?". இந்தக் கேள்வியைக் கேட்டதுமே, தன்னோட வயசையும், சீனியாரிட்டியையும் பிரியங்கா மறைமுகமாக சுட்டிக்காட்டிட்டார்னு புரிஞ்சுக்கிட்ட சரத்குமார், டக்குனு மைக்கைப் பிடிச்சு, வெடி'யைப் போட ஆரம்பிச்சிட்டாரு!
"அப்போ நான் யாரு? எனக்கும் இப்போ உள்ள தலைமுறை நடிகர்களுக்கும் இடைவெளியே கிடையாது!" என்று ஆரம்பித்தார் சரத்குமார். அடிப்படையிலேயே ஹியூமர் உணர்வுள்ள நடிகரான சரத்குமார், தான் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் அதை முதல் படமாகத்தான் பார்க்கிறதாகவும், இன்னும் சினிமால நிறையக் கத்துக்கிட்டு இருக்கிறதாகவும் கூறினார். "கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு"ன்னு அவர் சொன்னபோது, பிரியங்கா சுதாரிச்சுக்கிட்டு, "சாரி, நீங்க ஒரு லெஜெண்ட்!"னு சொல்லிச் சமாளிச்சார்!
சரத்குமாரின் ரகசியம்
சரத்குமாரைப் பொறுத்தவரை, தன்னை யாரும் 'வயசானவர்'னு சொல்லிட்டா, அது அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. எப்போதும் இளமையாகவும், கட்டுக்கோப்பாகவும் உடலைக் கவனிச்சுட்டு வர்றவர் அவர். இதைத்தான் பிரியங்காவின் கேள்விக்கும் அவர் கொடுத்த பதில் உணர்த்துச்சு. மேடைகளில் எப்போதும் கலகலப்பாகப் பேசும் சரத்குமார், பல பேட்டிகள்ல தன்னோட பாசத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தியிருக்காரு.
முன்னொரு முறை
"நான் ஒரு அரசியல் மேடையில பேசும்போது, சில பேர் என்னை ரசிக்காதப்பவும் கூட, 'நீங்க சிரிச்சாதான் எனக்குப் பிடிக்கும். உங்க முகத்துல சிரிப்பு இருந்தாதான் எனக்குப் பாசிட்டிவ் எனர்ஜி வரும்!'னு பேசுவேன்!"னு சொல்லியிருக்காரு. ஒருமுறை, ஒரு பேட்டியில, தன் 'ஃபிட்னஸ்' பற்றிப் பேசும்போது, "இன்னும் 20 வருஷத்துக்கு இதே மாதிரி இளமையா இருப்பேன்"னு சொல்லி, பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்காரு!. அதுபோல தான் நூறு வயசு தாண்டி வாழும் ரகசியத்தை சொல்லுறேன் என்ன முதலமைச்சர் ஆக்குங்க என்று அவர் பேசியது வைரல் ஆனது.
முத்தம் வேணாம்
அமர்ந்திருந்த பிரியங்காவிடம் சரத்குமார் அடுத்த கலகலப்பைக் கிளப்பினார்!. "இங்கு வரும் ஒவ்வொருத்தரும் முத்தம் கொடுக்கிறீங்க, கட்டிப்பிடிக்கிறீங்க. அதுக்காக என்னையும் கட்டிப்பிடிங்கனு சொல்லமாட்டேன்!" என்று சரத்குமார் கண்ணடித்தபடி கேட்க, பிரியங்காவிற்குத் தர்மசங்கடம்! ஆனா, நிலைமையைச் சமாளிக்க உடனே ஓடி வந்த பிரியங்கா, சரத்குமாரை அன்போடு கட்டியணைச்சுத் தன் மரியாதையையும், அன்பையும் பரிமாறிக்கொண்டார்.
தன் வயதையும், அனுபவத்தையும் சுட்டிக் காட்டிய பிரியங்காவின் கேள்வியை, சரத்குமார் ஒரு ஜாலியான 'மாஸ்' பதிலால் சமாளித்து, மேடையைக் கலகலப்பாக மாற்றினார். பிரியங்கா இனியாவது, சரத்குமாரிடம் கேள்விகள் கேட்கும்போது, அவர் ஒரு 'லெஜெண்ட்' என்பதை மறக்க மாட்டார்னு நம்பலாம்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications