இனி இவர்தான் புது கண்ணன்.. பாண்டியன் ஸ்டோரில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. காரணம் இதுதானாம்...!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் கேரக்டரில் இப்ப வரைக்கும் சரவண விக்ரம் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து சரவணன் விலக போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தற்போது விஜே தீபிகா வெளியிட்ட புகைப்படம் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் அனைத்து தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்க போகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. இதுவரைக்கும் கூட்டு குடும்பமாக இருந்த அண்ணன் தம்பி தற்போது சண்டை போட்டு ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து இருக்கின்றனர்.
இப்போது முல்லையின் வளைகாப்பில் குடும்பம் மீண்டும் ஒன்று சேருமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே வெளியான புரோமோவில் இது கனவா நலவா என்று ரசிகர்களை குழப்பும் விதமாக சொல்லி வைத்திருக்கின்றனர். இன்றைய எபிசோட்டில் கூட ஜீவாவும் மீனாவும் வளைகாப்புக்கு கிளம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை போக விடக்கூடாது ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜனார்த்தனன் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
அதுபோல ஐஸ்வர்யாவும் கண்ணனை குரூப் சட்டை போட கூடாது என்று பிளான் போட்டு கடைசியில் அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரே கலரில் சட்டை போட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் அனைவரும் ப்ரோமோவில் காட்டியது போல ஒற்றுமையாக முல்லையின் வளைகாப்பில் கலந்து கொள்வார்களா? இல்லை இது கனவா என்பது பலர் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் பற்றி ஒரு அதிர்ச்சிகரமான அப்டேட் வெளியாகியிருக்கிறது.

இது வேறொன்றுமில்லை இந்த சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடிக்கும் நடிகர் சரவண விக்ரம் இந்த சீரியலை விட்டு விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சரவண விக்ரமுக்கு சினிமா வாய்ப்பு வந்துருப்பதாகவும் அதனால் இந்த சீரியலை விட்டு விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சரவண விக்கிரமன் ஏற்கனவே ஒரு யூடியூப் வைத்திருக்கிறார். அடிக்கடி பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் வேறு வழி இல்லாமல் இந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இனி புது கண்ணனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தம்பியாக நடிக்கும் நடிகர் நவீன் தான் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ளும் வகையில் தற்போது விஜே தீபிகா நவீனோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு," விரைவில் காத்திருங்கள் ஒரு மாற்றம் வரும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல்கள் பாண்டியன் ஸ்டோர் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications