பெற்றோர் துணையின்றி சரிகமபவிற்கு வந்த 14 வயசு பொண்ணு.. சைந்தவி செய்த செயல்! இப்படியும் மனுஷங்க இருக்கிறாங்க!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு கன்னியாகுமரியிலிருந்து 14 வயது பொண்ணு பெற்றோர் துணை இன்றி தனியாக வந்திருக்கிறார். அந்த பெண் குழந்தைக்காக சைந்தவி செய்த செயல்தான் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. அதோடு அந்த குழந்தையின் குடும்ப சூழ்நிலை கேட்டு அனைவருமே பீல் பண்ணி வருகின்றனர்.
சரிகமப நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சீனியர்களுக்கான சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. அதை தொடர்ந்து ஜூனியர்களுக்கான சீசன் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆடிஷனில் செலக்ட் ஆகி இருக்கிறார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில குழந்தைகளை மட்டும் தான் செலக்ட் செய்து இருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் கன்னியாகுமரி மித்ரா. கன்னியாகுமரியை சார்ந்த மித்ராவிற்கு 14 வயது தான் ஆகிறது. இந்த குழந்தை பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே பாடல் திறமையும் இருந்திருக்கிறது. ஆனால் இவரை சரிகமப ஆடிஷனுக்கு கூட்டிட்டு வருவதற்கு யாரும் இல்லையாம். இதனால் தனியாகவே இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சியில் பாடும் போட்டியாளர்கள் எல்லோரும் தங்களுடைய குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் மேடைக்கு வந்தனர். அப்போது மித்ரா மட்டும் யாரும் இல்லாமல் தனியாக வந்து நிற்க, அவரிடம் பாடகி சைந்தவி நீங்க யாரையும் கூட்டிட்டு வரலையா மித்ரா என்று கேட்கிறார். அதற்கு மித்ரா அப்பா அம்மாவால ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வர முடியாது என்று சொன்னதும், அப்படியா அப்போ நான் உங்களுக்கு துணையா அந்த இடத்துக்கு வாரேன் என்று மேடைக்கு வந்த சைந்தவி மித்ராவை கட்டிப்பிடித்து தைரியம் கொடுத்தார்.
ரொம்ப பயத்தோடு இருக்க. பதட்டத்தை விட்டுட்டு நார்மல் ஆகி பாடு உனக்கு ஒரு அக்காவா நான் இருக்கிறேன் என்று மீண்டும் சைந்தவி தைரியம் சொல்லி இருந்தார். பிறகு மித்ரா "மரிக்கொழுந்தே.. மல்லிகை பூவே" என்ற பாடலை பாடினார். அவர் பாடியதை கேட்டு பாராட்டி அவரை செலக்ட் செய்து விட்டனர். பிறகு எதற்காக உங்க அப்பா அம்மா வரல என்று நடுவராக இருக்கும் ஸ்வேதா கேட்டார்.
அப்போதுதான் தன்னுடைய சோகக் கதையை சொல்லி மித்ரா அனைவரையும் அழ வைத்துவிட்டார். அதாவது மித்ராவின் அப்பா வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருக்கிறார். பிறகு சில மாதங்களிலேயே அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதாம். ஹாஸ்பிடல் போய் செக் பண்ணி பார்க்கும் போது தான் அவருக்கு கிட்னியில் 80 சதவீதம் செயலிழந்து போய்விட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.

பிறகு மித்ராவின் அம்மா தான் தன்னுடைய கணவருக்காக ஒரு கிட்னியை கொடுத்திருக்கிறார். அதுவும் மித்ராவின் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்து கிட்னி எடுக்கும் போது ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது அவருக்கும் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. அவரால் வேகமாக பேச முடியாதாம், சிரிக்க முடியாதாம், தும்ம கூட முடியாது என்று மித்ரா கலங்கியபடி சொல்லி இருக்கிறார். பெற்றோர் இருவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க தான் செலக்ட் ஆனதை கூட ஷேர் பண்ண யாரும் இல்லாமல் அந்த மேடையில் மித்ரா தனியாக அழுது கொண்டிருந்தார்.
அவருக்கு சைந்தவி தான் ஆறுதலாக பேசினார். உனக்கு ஒரு அக்காவாக இந்த நிகழ்ச்சியின் கடைசி வரைக்கும் நான் இருப்பேன். அப்பா அம்மாவிடம் சொல்லிவிடு எனக்குன்னு ஒரு அக்கா இருக்காங்க, அவங்க பாத்துக்குவாங்கன்னு சொல்லு. உனக்கு என்ன வேணுமோ எல்லாவற்றையும் நானே வாங்கி தருவேன். என்கிட்ட நீ எதனாலும் ஷேர் பண்ணிக்கலாம் என்று சொல்லி இருந்தார்.
பிறகு நடுவராக இருக்கும் கங்கை அமரன், ஸ்வேதா மற்றும் ஸ்ரீநிவாஸ் உட்பட எல்லோரும் சேர்ந்து நாங்கள் உனக்கு துணையாக இருப்போம் அதுபோல உன்னுடைய பெற்றோருக்கு தேவையான சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த காட்சி பார்ப்பவரை கண்கலங்க வைத்திருக்கிறது. அதோடு இந்த குழந்தையின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நடந்து அவருடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications