சரிகமபா நாகார்ஜுனாவின் பல வருட காதல் வாழ்க்கையில் சோதனை.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
சென்னை: ஜீ தமிழ் சரிகமபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நாகார்ஜுனா தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பல வருடங்களாக தான் காதலித்து வந்த பெண் கடைசி நேரத்தில் சொன்ன வார்த்தையும், பிறகு அந்தப் பெண்ணால் தனக்கு கிடைத்த அதிர்ச்சியை பற்றி நாகார்ஜுனா பேசியிருக்கிறார்.
நாகார்ஜுனாவின் சோக கதையை கேட்டு சரிகமபா நடுவர்கள் வயிறு வலிக்க சிரித்திருக்கின்றனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா நிகழ்ச்சியின் மூலமாக பல பாடகர்கள் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது ராமநாதபுரத்தை சார்ந்த பாடகர் நாகார்ஜுனாவும் இடம் பிடித்திருக்கிறார். இவர் ஒரு மீனவ குடும்பத்தை சார்ந்தவர். மீன் பிடிக்கப் போகும்போது கேட்ட பாடல்களை வைத்து அவராகவே பாடி, எந்த ஒரு பயிற்சியும் இல்லாமலே இந்த நிகழ்ச்சியில் பல பேருடைய மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சியால் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல..! 7 பீரோ புடவை வைத்திருக்கும் பெண் உருக்கம்
சரிகமபா நிகழ்ச்சிக்கு பலரும் பலவிதமான உடைகளில் வந்து அசத்தியிருந்தாலும் நான் எப்போதும் தனித்துவம் என்று சொல்கின்ற மாதிரி நாகார்ஜுனா லுங்கியோடு வந்து பலரையும் வியக்க வைத்திருக்கிறார். தன்னுடைய ஏழ்மையிலும் விடாமுயற்சியால் இந்த அளவிற்கு வளர்ந்து வந்திருக்கும் நாகார்ஜுனா தன்னுடைய காதல் கதையை குறித்து சரிகமபா மேடையில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வருகிறது.
அதில் வழக்கம் போல நாகார்ஜுனா பாட்டு பாடி முடித்ததும் நடுவர்கள் இந்த அளவிற்கு காதல் பெயிலியர் ஆன பாடலை நீ பாடியிருக்க என்றால் உண்மையில் உனக்கு லவ் ஃபெயிலியர் ஆகி இருக்கிறதா? என்று கேட்க வேண்டாம் சார். இதை அந்த பொண்ணு பாத்தா தப்பாயிடும். அந்த பொண்ணுக்கு கெட்ட பெயர் ஆயிடும் என்று நாகார்ஜுனா வெட்கப்பட அப்படியே தொகுப்பாளர் அர்ச்சனா அப்படி என்றால் கேமராவை எல்லாம் ஆப் செய்து விடலாம். நீ உன்னுடைய கதையை சொல்லு என்று நாகார்ஜுனாவை தூண்டி விடுகிறார்.
ஆரம்பத்தில் எப்படி எப்படி எல்லாமோ சமாளித்து பின்பு அந்த கதையை ஏன் சார் கேக்குறீங்க ஒரு பொண்ணை 3 வருஷமா நானும் உருகி உருகி காதலிச்சேன். அந்த பொண்ணு எனக்கு 7:45 க்கு போன் பண்ணி நான் எட்டு மணிக்குள்ள உன் பொண்டாட்டியா ஆகணும் இல்லனா நடக்கிறது வேறன்னு சொல்லிட்டாராம். அதைக் கேட்டு நாகர்ஜுனா ஜெர்க் ஆகி இருக்கிறார்.
பிறகு எட்டு மணிக்குள் நீ வந்து எனக்கு தாலி கட்ட வேண்டும் என்று கூறினாராம். அப்போ நாகர்ஜுனாவின் சகோதரிகளுக்கும் திருமணம் ஆகாமல் இருந்திருக்கிறது. அதனால் முடியாது என்று சொல்ல, நான் வேண்டுமா? உன்னுடைய குடும்பம் வேண்டுமா? என்று அந்தப் பெண் கேட்டாராம். அதற்கு நாகர்ஜுனா என்னுடைய குடும்பம் தான் வேண்டும் என்று கூறினாராம். உடனே அந்த அந்தப் பொண்ணு போனை வைத்து விட்டாராம்.
அடுத்த நாள் இவரும் வழக்கம் போல கடலுக்கு போயிட்டு திரும்பி வந்திருக்கிறார். அப்போ தான் தெரிஞ்சதாம் அந்த பொண்ணு அவரோட மச்சான் கூட ஓடிப் போயிட்டான்னு. நான் எட்டு மணிக்கு போகலன்னு சொன்னதும் எட்டு மணிக்கு அவங்க மச்சான கல்யாணம் பண்ணி இருக்கு என்று சொல்ல, இந்த கதையை கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்து இருக்கின்றனர்.
இதுவரைக்கும் நாகார்ஜுனா பாடிய பாடல்கள் தான் வேற லெவலில் வைரல் ஆகி வரும் நிலையில், தற்போது நாகார்ஜுனாவின் காதல் கதையும் வைரல் ஆகி வருகிறது. இந்த காதல் டிராப் ஆகி மூன்று வருடம் ஆனாலும் நாகர்ஜுனா அதற்குப் பிறகு யாரையும் காதலிக்காமலும் திருமணம் செய்யாமல் தான் இருந்து வருகிறாராம்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications