போட்டியாளர்கள் செயலால் நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவெடுத்த பாடகி சுசீலா.. காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா 3 நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக பாடகி சுசீலா கலந்துகொண்டு இருக்கிறார்.

பிளாக் அண்ட் வைட் ரவுண்டில் அவருடைய பாடல்கள் போட்டியாளர்கள் பாடி கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் பாடிய பாட்டை கேட்டு பாடகி சுசீலா நான் இப்பவே கிளம்புறேன் என்று கூறியிருக்கிறார்.

SaReGaMaPa Season 3 promo Singer Susila episode

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது விஜே அர்ச்சனா தான் தான் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 23 போட்டியாளர்கள் பங்கேற்று இப்போது 12 போட்டியாளர்கள் மட்டும்தான் இருக்கின்றனர். இதில் அக்ஷயா, ஜீவன் ஆகியோர் ஏற்கனவே பைனலுக்கு சென்று விட்ட நிலையில் மீதமுள்ள போட்டியாளர்கள் பைனலுக்கு செல்வது யார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வாரம் பிளாக் அண்ட் ஒயிட் ரவுண்ட் நடைபெற இருக்கிறது. இந்த ரவுண்டிற்காக சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ சுசீலா அம்மா அவர்கள் பங்கேற்று இருக்கிறார். அவரோடு கார்த்திக் ராஜ், சூரி, பாடகர் யுகேந்திரன் அதாவது மலேசியா வாசுதேவனின் மகன் சாந்தனு மற்றும் கயல் ஆனந்தி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்களுடைய பட பிரமோஷனுக்காகவும் பங்கேற்று இருக்கின்றனர்.

SaReGaMaPa Season 3 promo Singer Susila episode

அப்போது போட்டியாளர்கள் பாடும் பாட்டு கேட்டு பாடகி சுசீலா கொடுத்த கமெண்டால் இன்ப அதிர்ச்சி அடைந்து லக்ஷனா, ராகவர்ஷினி ஆகியோர் கண்கலங்கி இருக்கின்றனர். அதாவது லக்ஷனா பாடும் பாட்டை கேட்ட சுசீலா அம்மா நான் கிளம்புறேன் இந்த பொண்ணு என்ன மாதிரியே பாடுது என்று பாராட்டி இருக்கிறார்.

அதுபோல ராகவர்ஷினி பாடிய பாட்டிலை கேட்டு நான் கூட இப்படி இருக்க மாட்டேன் என்று பாராட்டி இருக்கிறார். இந்த பிரமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் யார் வெளியேறுவார்கள் என்றும் யார் அடுத்ததாக பைனலுக்கு போவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் அதிகமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+