சரிகமப-வில் காத்திருக்கும் டபுள் ட்ரீட், இந்த வாரம் செம ஸ்பெஷல் ரவுண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வரும் நிலையில் ஆடி மாதம் தொடங்குவதால் கடந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்று நடைபெற்றது. சரிகமப மேடையில் சாமி வந்து ஆடும் அளவிற்கு இந்த ரவுண்ட் பரவசம் நிறைந்ததாக நடந்து முடிந்தது.

Television sarigamapa zee tamil 4

அதாவது பக்தி பாடல்களை பாடி பெரிய அளவில் பாப்புலரான வீரமணி ராஜு, மஹாலிங்கம் மற்றும் மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். முகேஷ், சரத், ஸ்வேதா, விஜய் லோஷன், சரண், இந்திரஜித் ஆகியோர் கோல்டன் ஷவரை தட்டி செல்ல ஜெய பார்கவி, மகிழன் மற்றும் அமன் ஆகியோர் பிளாட்டினம் பெர்பாமன்ஸ் ஷவரை பெற்றுள்ளனர்.

ரியல் பெருமாள் சிலை, அம்மன் கெட்டப், அய்யப்பன் கெட்டப் என பிரம்மிக்க வைக்கும் வேடங்களில் பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்தனர். பொதுவாக ஒவ்வொரு சீசனிலும் சரிகமப நிகழ்ச்சியில் பக்தி பாடல்கள் சீசன் பெரிய அளவில் ரசிகர்களை உணர்வு பூர்வமாக பரவச நிலை அடைய வைக்கும். மதத்தை தாண்டி சில பாடல்கள் பலருடைய மனதை கவர்ந்து விடும். அந்த மாதிரி பாடல்களை உணர்வு பூர்வமாக போட்டியாளர்கள் பாடி இருக்கும் நிலையில் பலர் பாடலை கேட்டு மெய் மறந்து போயிருக்கின்றனர்.

அதிலும் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்ற பாடலை போட்டியாளர் ஒருவர் பாடியதை கேட்டு இந்த பாடலை பாடிய வீரமணி ராஜு அங்கு ஐயப்பன் சிலை போல இருந்த குழந்தையின் காலில் விழுந்து இந்த பாடல் எங்களுக்கு இந்த தலைமுறையினரும் பாடும் அளவிற்கு ஃப்ரஷ் ஆக இருக்கிறது என்றால் அது ஐயப்பன் போட்ட பிச்சை தான் என்று அவர் பேசி இருந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் சரிகமபவில் சரிகமப சங்கமம் என்ற ரவுண்ட் நடைபெற உள்ளது. அதாவது சரிகமப சீனியர்கள் இந்த சீசன் போட்டியாளர்களுடன் இணைந்து பாட உள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ரவுண்ட் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+