சட்டுனு காலில் விழுந்த தந்தை.. உடைந்து போன மகளின் கற்பனைகள்.. கண்கலங்கிய பாடகி சைந்தவி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியில் டெடிகேஷன் ரவுண்டு இந்த வாரத்தில் நடைபெற இருக்கிறது. அதில் ஸ்வேதா தன்னுடைய தந்தையிடம் கொடுத்த கடிதத்தால் அரங்கில் இருந்த ஒட்டு மொத்த நபர்களும் கண்கலங்கி அழுது இருக்கின்றனர். எல்லோரும் அழும் அளவிற்கு என்ன நடந்தது? அந்த கடிதத்தில் என்னதான் எழுதி இருந்தது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜீ தமிழில் மக்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சரிகமப நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரண்டு பகுதிகளாக ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சரிகமப ஜூனியர் நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து சரிகமப சீனியர் சீசன் 4 நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் இந்த வாரத்தில் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றிருக்கிறது.

அதில் போட்டியாளர் ஸ்வேதா முதல் முறையாக தனக்காக இந்த மேடைக்கு வந்த தன்னுடைய தந்தையிடம் இந்த கடிதம் என்னுடைய அப்பாவிற்கு நான் என்னுடைய மனதில் இருந்து அவரிடம் பேச நினைப்பதை இந்த கடிதத்தில் எழுதி இருக்கிறேன் என்று கடிதத்தை எழுதி கொடுத்து இருக்கிறார். அதை அவருடைய தந்தை மைக்கில் மேடையில் படிக்கிறார். அதில், அன்புள்ள அப்பாவிற்கு உங்கள் ஆசை மகள் எழுதும் முதல் கடிதம்.
அப்பா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் உங்களுக்கு என்னை பிடிக்குமா என்று இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியாது என்ற வார்த்தையை படிக்கும்போதே அவர் கண்கலங்கி அழுது விடுகிறார். மறு வார்த்தை பேச முடியாமல் சில நிமிடங்கள் தயங்கி நின்று உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அதை இன்னைக்கு வரைக்கும் உன்னிடம் காட்டுனது கிடையாது என்று அழுது கொண்டே சொல்ல,

ஸ்வேதா இப்ப வரைக்கும் அவருக்கு என் மேல பாசம் இருக்கா? இல்லையா? என்று கேள்வி வந்து கொண்டே இருக்கிறது. அவர் என் மேல பாசமா இருக்கணும்னு ஏக்கமா இருக்கு. ஒரே ஒருமுறை உங்களை கட்டிப்பிடித்து உங்ககிட்ட முத்தம் வாங்கணும் என்று சொல்லும் போதே அவருடைய தந்தை ஸ்வேதாவின் காலில் டக்கென்று விழுந்து விட, இதை எதிர்பார்க்காத எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதோடு இந்த நெகிழ்ச்சியான தருணத்தை பார்த்த எல்லோரும் கண்கலங்கி அழுது கொண்டிருக்கின்றனர். நடுவராக அமர்ந்திருக்கும் சைந்தவி இதை சற்றும் எதிர்பார்க்காமல் தந்தை மகளின் பாசத்தை பார்த்து கண்கலங்கி இருக்கிறார். அதைத் தொடர்ந்து பேசிய அர்ச்சனா ப்ளீஸ் எங்களுடைய உலகத்தில் மிகப்பெரிய பாராட்டு தந்தைகள் நீங்க கொடுக்கிற பாராட்டு தான் என்று சொல்லி இருக்கிறார்.
பொதுவாக பல வீடுகளில் தந்தைகளுக்கு பெண் குழந்தைகள் தான் ரொம்பவும் பிடித்தவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு சில வீட்டில் தந்தைகள் தன்னுடைய பாசத்தை பெண் குழந்தைகள் மீது காட்டாமல் அதை மறைத்து வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் இப்போது சரிகமப நிகழ்ச்சியிலும் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications