உடைந்த சரோஜாதேவி.. என் மகனை ஆசீர்வதித்தாங்க.. முத்தமிழில் இல்லாதது சரோஜா தேவி தமிழ்: ரமேஷ் கண்ணா
சென்னை: அன்றைய காலகட்டத்தில் அதிகளவு சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவர் சரோஜா தேவி. ஆதவன் படத்தில் அவரது கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்தது... நடிகை சரோஜா தேவி தமிழில் நீண்ட காலம் நடித்த படம் ஆதவன் ஆகும்.. அதுமட்டுமல்ல, இதுவே அவர் கடைசியாக நடித்த படமும் ஆகும்.. இந்த படத்துக்கு கதை, திரைக்கதையை நடிகர் ரமேஷ் கண்ணா எழுதியிருந்தார்.. இந்நிலையில், நம்முடைய ஒன் இந்தியா வாசகர்களுக்காக, ரமேஷ் கண்ணா தந்த சிறப்பு பேட்டியில், சரோஜா தேவியை நினைவுகூர்ந்துள்ளார்.
ரமேஷ் கண்ணா நம்மிடம் கூறும்போது, "சின்ன வயசிலிருந்தே நான் சரோஜா தேவியின் தீவிர ரசிகன்.. அந்த காலத்திலிருந்தே அவருக்கு நான் ரசிகன்..

சூப்பர் ஸ்டார்கள்
பல்வேறு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர்.. தெலுங்கில் என்டி ராமராவ், நாகேஸ்வர ராவ் போன்றோருடனும், கன்னடத்தில் ராஜ்குமார், கல்யாண்குமார் போன்றோருடனும், தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போன்றோருடனும் என 3 மாநில டாப் ஸ்டார்களுடன் இணைந்து, நடித்த பெருமைக்குரியவர்.
சரோஜா தேவி ஒரு மிகப்பெரிய லெஜண்ட்.. அவருடன் ஆதவன் படத்தில் பணிபுரிந்தது என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன்.. கடந்த 2010-ல் ஆதவன் படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டு, அதிலுள்ள கேரக்டரில் சரோஜா தேவி நடித்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் கேஎஸ் ரவிக்குமாரிடம் சொன்னேன்.
இளையமான் கேரக்டர்
அவரும் சரோஜா தேவியின் தீவிர ஃபேன் என்பதால், உடனே ஓகே சொன்னார்.. பிறகு, சரோஜாதேவியிடம் ஆதவன் படத்திற்கான கதையை சொல்லி சம்மதம் பெற்றாகிவிட்டது. ஷூட்டிங்கும் ஆரம்பமாகிவிட்டது.
ஆனால், திடீரென நான் செய்ய வேண்டியிருந்த காமெடிக்கு வடிவேலுவை புக் செய்துவிட்டார்... இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த நான், எப்படியாவது சரோஜாதேவியுடன் நடித்தாக வேண்டும் என்பதற்காக, இளையமான் என்ற கேரக்டரை இதற்காகவே உருவாக்கினேன்.. அந்த கேரக்டருக்கும், அந்த படத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்றாலும், சின்ன கேரக்டரை உருவாக்கி நடிக்க காரணமே சரோஜா தேவி அம்மாவுடன் நடித்தாக வேண்டும் என்ற லட்சியம்தான். .
அன்று வந்ததும் அதே நிலா என்று எம்ஜிஆருக்கு பிறகு, நான்தான் பாடி ஆடி நடித்திருப்பேன் போல.. அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது, என்கூட நல்லா பேசுவாங்க.. ரொம்ப ஃபிரண்டாயிட்டாங்க..
அக்கம் பக்கம் பார்க்காதே
எம்ஜிஆருடன் நடித்த அனுபவங்களை சொல்வார்.. அக்கம் பக்கம் பார்க்காதே என்ற பாட்டில் சைக்கிள் ஓட்டிக் கொண்டே பாடுவார்.. அதில், அக்கம், பக்கம் என்ற வார்த்தைகளுக்கேற்ப இரு பக்கமும் பார்த்து சைக்கிள் ஓட்டுவார்..
"அந்த பாட்டில் நிஜமாகவே எம்ஜிஆர்தான் உங்களுக்கு சைக்கிள் ஓட்ட கற்று தந்தாரா?" என்று கேட்டேன்.. அதற்கு சரோஜாதேவி, "எனக்கு சின்ன வயசுலேயே சைக்கிள் ஓட்ட தெரியும்.. சைக்கிள் ஓட்ட தெரியாத மாதிரி நடித்தேன் " என்றார்.. அந்த அளவுக்கு பிரம்மாதமாக நடித்திருப்பார்.
மகனின் திருமணம்
இதற்கு பிறகு பல வருடங்களுக்கு பிறகு என்னுடைய 2 வது மகனுக்கு திருமணம் வைத்திருந்தேன்.. இதற்காக கல்யாண பத்திரிகை தந்து அழைப்பிதழும் அவருக்கு தந்தேன்.
இதற்கெல்லாம் பெங்களூரிலிருந்து வரமாட்டார் என்றே நினைத்தேன்.. ஆனால், என் மகன் திருமணத்தில் கலந்துகொண்டது எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது..
என்னுடைய சம்பந்தியின் அம்மா பெயரும் சரோஜா தேவிதான் என்று சொன்னதுமே, அதைக்கேட்டு சந்தோஷப்பட்டார்.. அனைவருடனும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.. மணமக்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு போனார்.
சரோஜாதேவியின் தமிழே தனித்தமிழ்... "முத்தமிழில் இல்லாத இன்னொரு தமிழ் இருக்கு.. அதுதான் சரோஜா தேவியின் தமிழ் என்றார் டாக்டர் கலைஞர்..அதுதான் உண்மை" என்றார் ரமேஷ் கண்ணா.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications