Sathya Serial: என்னை கலாய்ச்சவங்களுக்கு இதுதான் பதில்!
சென்னை:சமூக வலைத் தளத்தில் நாம் எதையாவது பதிவிடுகிறோம் என்றால் அதற்கான பாசிட்டிவ், நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரத்தான் செய்யும். இதை எல்லாம் பார்த்து பக்குவப்பட்டு நம்மை நாம் மேம்படுத்திக்க வேண்டும்.
ஜீ தமிழ் டிவியின் சத்யா சீரியலில் நடிச்சு இருக்கும் ஆயிஷா என்னை கலாய்ச்சவங்களுக்கு இதுதான் பதில் என்று தான் வாங்கிய விருதை உயர்த்தி காண்பித்து பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கார்.
ஜீ தமிழ் டிவியின் குடும்ப விருதுகள் வழங்கும் விழா வரும் சனிக் கிழமை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதில் கண்டதுதான் இந்த நிகழ்வு.

சீரியல் சத்யா
மெக்கானிக் பட்டறை வச்சு நடத்தும் சத்யா ஒரு வித்தியாசமான பெண். கிராப் வெட்டிய தலை. எப்போதும் ஆண்களுடன் சகவாசம், ஆண்கள் போலவே பேண்ட் ஷர்ட் என்று இவரது கெட்டப் நன்றாகவே இருக்கும். அப்பாவிற்குப் பிறகு அவரது மெக்கானிக் பட்டறையை எடுத்து நடத்தும் பெண்.

ஒரு ஆண் பிள்ளையாக
குடும்பத்துக்கு ஒரு ஆண் பிள்ளையாக இருக்கும் இந்த சத்யா தனது தங்கை படிப்பு, குடும்ப செலவுகள், அம்மா பாட்டியைப் பார்த்துக் கொள்வது என்று எல்லா விதத்திலும் பொறுப்பான பெண். இவளின் அக்கா தங்கை சம்பாதிச்சு தரும் பணத்தில் ஆடம்பரமாக கல்லூரி சென்று வருகிறாள்.

அக்கா தங்கை
அக்காவுக்கும், தங்கச்சிக்கும் விஷ்ணுவின் மேல் காதல்.விஷ்ணு சத்யாவுடன் சாதாரணமாகத்தான் பழகுகிறான். இதை காதல்னு நினைச்சு சத்யா அமுல்பேபி அமுல்பேபி என்று எப்போதும் அவனை கூப்பிட்டு,கொஞ்சி அவனது நினைவாகவே இருக்கிறாள். இவள் காதலுக்கு குறுக்கே நிற்பது இவளது அக்காதான்.

கெட்டப் சத்யா
சத்யாவின் இந்த கெட்டப்தான் அவளை காதலிக்க செய்ய முடியாமல் தடுக்கிறதோ என்னவோ, விஷ்ணு இவளை துளியும் காதலிக்கவில்லை.அதை சொல்லாம் என்று பட்டறைக்கு போனால், அங்கு வேலை செய்யும் சத்யாவின் ஆட்கள் இப்ப சொல்லாதீங்க..சத்யா உங்களை பிரிய முடியாம எதாவது செய்துக்கும்னு சொல்றாங்க.

விஷம் விஷ்ணு
அப்படி எல்லாம் அவ செய்துக்க மாட்டேன்னு இவன் சொல்ல, இல்லை..நேத்து நீங்க எதோ பேசிட்டேங்கன்னு விஷம் குடிக்கற முடிவுக்கே போயிருச்சுன்னு சொல்றாங்க.இப்படி சத்யாவாக ஆயுஷா நடிச்சு இருப்பது சென்னை தமிழில் பேசி இருப்பது என்று எல்லாமே சீரியலுக்கு வித்தியாசமாக அதே சமயம் பிளஸாகவும் இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications