சூர்யாவின் "சீன்” புயலில் சிக்கியதா மூக்குத்தி அம்மன் 2? 5வது நாள் வசூலில் இவ்வளவு பெரிய வித்தியாசமா!
சென்னை: தீபாவளிக்கு வெளியான சூர்யாவின் சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 என இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. ஆனால் தியேட்டரில் வெளியாகி 5 நாட்கள் கடந்த நிலையில் படங்களின் வசூல் நிலவரத்தை பார்த்தால் பெரிய வித்தியாசம் தெரிகிறது. குறிப்பாக நேற்றைய வசூலிலும் சீன் படத்துடன் ஒப்பிடும்போது மூக்குத்தி அம்மன் 2 மிகவும் பின்தங்கி உள்ளது.

சீன் படத்தின் வசூல் நிலவரம்
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி வெளியானது. முதல் நாளிலேயே இந்தியாவில் 19. 15 கோடி நெட் வசூல் செய்த இந்த படம் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. 2வது நாளில் 20.35 கோடியும், 3வது நாளில் 23.65 கோடியும், 4வது நாளில் 21.40 கோடியும் வசூலித்து இருக்கிறது. ஆனால் தீபாவளி விடுமுறை முடிந்து வார நாட்கள் தொடங்கியதும் 5வது நாளான நவம்பர் 10ஆம் தேதி வசூல் 12.85 கோடியாக குறைந்து இருக்கிறது. இருந்தாலும் 5 நாட்களின் முடிவில் இந்தியாவில் மட்டும் 97.40 கோடி வசூல் கிடைத்திருக்கிறது. வெளிநாட்டு வசூலையும் சேர்த்து உலக அளவில் 174.40 கோடி கிராஸ் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூக்குத்தி அம்மன் 2 வசூல் நிலை
மறுபக்கம் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு முதல் நாளில் இருந்தே வசூலில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. முதல் நாளில் இந்தியாவில் 1.88 கோடி நெட் வசூல் செய்த இந்த படம் 2வது நாளில் 2.45 கோடியும், 3வது நாளில் 4.60 கோடியும் வசூலித்து இருக்கிறது. 4வது நாளில் 5.15 கோடி வசூலித்து ஓரளவுக்கு முன்னேற்றம் காட்டிய நிலையில் நேற்று 5வது நாளில் மீண்டும் வசூல் குறைவு தொடங்கி இருக்கிறது. நவம்பர் 10ஆம் தேதி இந்த படம் இந்தியாவில் 2.10 கோடி நெட் வசூல் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதன் மூலம் 5 நாட்களில் மொத்த இந்திய வசூல் 16.18 கோடியாகவும் இந்திய கிராஸ் வசூல் 18.72 கோடியாகவும் இருக்கிறது.
2 படத்திற்கும் இருக்கும் வித்தியாசம்
5 நாட்களில் இந்திய நெட் வசூலை மட்டும் எடுத்து பார்த்தால் சீன் 97.40 கோடியை தாண்டி இருக்கிறது. மூக்குத்தி அம்மன் 16.18 கோடியுடன் இருக்கிறது. நயன்தாராவின் படத்தை விட சூர்யாவின் சீன் படம் 6 மடங்கு அதிக வசூல் பெற்றிருக்கிறது. நேற்றைய ஒரு நாள் வசூலிலும் இதே நிலைமைதான் நடந்திருக்கிறது. தீபாவளி ரேஸில் தற்போது சீன் தெளிவாக முன்னிலை பிடித்திருக்கிறது. வரும் நாட்களில் வசூல் மீண்டும் அதிகரிக்கும அல்லது இந்த இடைவெளி இன்னும் பெரிதாகுமா? என்பதுதான் இப்போ ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வி.


Click it and Unblock the Notifications
