சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் ...குட்டீஸ் படம்!
உலகம்: சோனி பிக்ஸ் சானலில் தினமும் காலை குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமான படங்களை ஒளிபரப்பி வருகிறார்கள். எல்லா தரப்பு படங்களையும் ஒளிபரப்பி வரும் சோனி பிக்ஸ்.. இப்போது காலை நேரத்தில் குழந்தைகளுக்கான படங்களை ஒளிபரப்பி வருகிறது.
Recommended Video
அந்த வரிசையில் சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்..தி ஆன்ட் புல்லி போன்ற படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. படம் ஆங்கிலத்தில் இருந்தாலும், குழந்தைகள் பார்த்து ரசிக்கும்படி இருக்கிறது.
அனிமேஷன், கார்ட்டூன் இவைகள்தான் இந்த படங்களில் இருக்கின்றன. எந்த ஒரு மனிதருக்கும் காட்சிக்குள் இடமில்லை. பாவம் இதை உருவாக்கத்தான் கம்பியூட்டரின் முன்னால் அமர்ந்து இரவு பகலாக கடுமையாக உழைத்து இருப்பார்கள்.

உழைப்பு உழைப்பு
அனிமேஷன் படம்.. கார்ட்டூன் படம் என்று சொல்லிவிடுகிறோம். ஆனால், இப்படி உருவான படங்களை பார்க்கும்போது கலைஞர்களின் கடின உழைப்பு திரைக்குப் பின்னால் எந்த அளவில் இருக்கிறது என்பதை உணர முடியும். இவர்கள் அனைவரும் கம்ப்யூட்டரின் முன்னால் உட்கார்ந்து ராப்பகலாக கடின உழைப்பது தந்து இருந்தால் மட்டுமே இப்படியான படங்கள் சாத்தியம்.

சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்
சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்.. இந்த படத்தில் ஒரு பெரிய அபார்ட்மெண்ட்ஸ் குடியிருப்பு. அதில் வசிக்கும் எல்லாருமே எதாவது பெட்ஸ் வளர்க்கிறார்கள். இவர்கள் வீட்டை விட்டு வெளியில் வேலைக்கு போகும்வரை பெட்ஸ் அவர்களையே சுற்றி சுற்றி வரும். வெளியில் சென்றுவிட்டார்கள் எனறால் அவ்வளவுதான்...

பெட்ஸ் உலகம்
வீட்டினர் வெளியே சென்ற அடுத்த நிமிடம் பெட்ஸ் உலகம் ஆரம்பித்துவிடும். கிளி அப்போதுதான் கூண்டை ஒரு எத்துவிட்டு கதவைத் திறந்து சுதந்திரமாக பறக்கும். பூனை அப்போதுதான் லேப்டாப்பை ஓபன் செய்து விளையாடும். நாய் பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்து தனது ஃ பிரண்ட்ஸை நலம் விசாரிக்கும்.

நாய்கள் பார்க்
கூட்டமாக சேர்த்துக்கொண்டு நாய்கள் பார்க் போயி, அங்கு விளையாடி மகிழ்வார்கள். எஜமானர்களை பற்றி பேசிக்கொள்வது.. அங்கு தங்களுக்கு பிடித்தமான பெட் கண்டால், ஓனருக்குத் தெரியாமல் பேசுவது என்று செம ஜாலியாக இருக்கிறது படம். பெட்ஸ் உலகம் இப்படியும் இருக்குமா என்று வியப்ப்பைத் தரும் கற்பனை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications