சீமானை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க.. சம்பளம் கொடுத்து சிக்கல்! LIK ட்ரெய்லர் பற்றி பிரபலம் ஓபன்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் தற்போது ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த படத்தில் நடிகரும் அரசியல் தலைவருமான சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு ஏற்கனவே ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் ட்ரெய்லர் வெளியான பிறகு, அதில் சீமான் வரும் காட்சிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரபலம் கருத்து
குறிப்பாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக கருத்து தெரிவிப்பவரான பரிசாலன் இதைப் பற்றி ஓபன் ஆக பேசியுள்ளார்.அவரது கருத்துப்படி, "சீமான் மாதிரி ஒரு அரசியல் தலைவரை இப்படிக் காட்டுவது சரியா? ட்ரெய்லரில் அவர் வரும் இடத்திற்கு முன்னாடி ஹீரோ பசுமை தாயகத்தில் இருந்து வரேன்னு சொல்லுவாரு அதற்கு எஸ் ஜே சூர்யா அந்த ஸ்டுப்பிட் (stupid) இடத்திலிருந்து வரியா நீனு கேட்பாரு.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ட்ரெய்லர்
அடுத்ததாக சீமான் படத்துல தன்னார்வலர் சிறைச்சாலை நடத்துகிறார். அன்று அவர் கராத்தே சொல்லிக் கொடுப்பது போன்ற காட்சிகள் எல்லாம் காட்டப்படுகிறது. ஆனால் அதுல இருக்கிற எல்லாரும் பைத்தியக்காரர் என்பது போல எஸ் ஜே சூரியா திட்டுகிறார். நிஜத்தில் சீமான் கட்சி நடத்திட்டு இருக்கிறாரு. பாடத்தில் அவரை இப்படி காட்டுவது இதுக்கு மேல நாம் தமிழர் கட்சியை அசிங்கப்படுத்தணுமா?
சீமான் நடிப்பு
கூப்பிட்டு வச்சி சம்பளம் கொடுத்து துப்பி இருக்காங்க. ஒரு எலியை ஒரு தேங்காயில் சில்லு வைத்து பிடிப்பது போலத்தான் இது. அந்த எலி நமக்கு சாப்பாடு கொடுக்கிறார்கள் என்று நினைத்துக்கொணடு உள்ளே போய் சிக்கிக்கும் அதே மாதிரி முட்டாள்தனம் தான் இது என்று பாரிசாலன் பேசி இருக்கிறார். இது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ரசிகர்கள் கருத்து
ஒரு சிலர் இவர் பேசியது சரி என்று சொல்கின்றனர். இன்னும் ஒரு சிலர் சீமான் இந்த படத்தில் எப்படி நடித்திருக்கிறார் என்பது பார்ப்பதற்காக பலர் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் அவர் பல படங்களில் நடித்து இயக்கி இருக்கிறார். அந்த படங்கள் எல்லாம் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது தான். அதேபோல இந்த படத்திலும் அவருடைய கேரக்டர் நல்ல கருத்து சொல்வது போல இருக்கும் என்றும் கருத்து கூறி வருகிறார்கள். படம் வருவதற்கு முன்பே இது போன்று விவாதங்களை சந்தித்து வருகிறது.
படம் பற்றி
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்பது ரொமான்ஸ், காமெடி கலந்த ஒரு எண்டர்டெய்னர் படமாக உருவாகி வருகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் பாடல்கள் ஏற்கனவே கவனம் பெற்றுள்ளன. இளம் தலைமுறையை குறிவைத்து, ஒரு வித்யாசமான கதைக்களத்துடன் இந்த படம் தயாராகி வருகிறது. விக்னேஷ் சிவனின் முந்தைய படங்களைப் போலவே, இந்த படத்திலும் காதல், நகைச்சுவை, உணர்ச்சி ஆகியவை கலந்திருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications