sembaruthi serial: செம்பருத்தி சித்தியைவிட நீளும் போலிருக்கிறதே...!
சென்னை: அழகிய அம்மா..கம்பீரமான தொழிலதிபர்.. கூடவே சென்டிமென்ட் பார்க்கும் பெண்மணி என்று செம்பருத்தி சீரியலில் கலக்கி வருகிறார் நடிகை பிரியா ராமன்.
சீரியலில் இவரது பெயர் அகிலாண்டேஸ்வரி... சும்மா கேட்கும் போதே உடம்பு அதிருதில்லே... ஆனால், தப்பு செய்தவங்க இவங்க பேரை கேட்டாலே பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்டு வீக்கு என்பது போல ஆட்டம் கண்டுவிடுவார்கள்..
அப்படிப்பட்ட பெண்மணியாக பிரியா ராமன் நடிப்பு அற்புதம். இந்த சீரியலில் இவருக்கான ரசிகர்கள் கூடி .இருக்கிறார்கள்;

மகள் பார்வதி
அகிலாண்டேஸ்வரி அம்மாவின் விசுவாசமான டிரைவரின் மகள் பார்வதி. இவளுக்கு ஒரு தம்பி மட்டும்தான். அம்மா இல்லை.இவள் அகிலாண்டேஸ்வரி அம்மா வீட்டுக்குப் போக, அங்கு அவங்க மகன் ஆதியுடன் காதல் உண்டாகி திருட்டு கல்யாணமும் நடந்துருது. கதையின் டிவிஸ்ட் இப்போதைக்கு இதை வைத்துதான் வெகு சுவாரஸ்யமாக நகர்கிறது.

கல்யாணம் தெரிந்தால்
அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்கு தனது மகன் ஆதிக்கும், டிரைவரின் பெண் தனது வீட்டு வேலைக்காரிக்கு கல்யாணம் ஆனது தெரிந்தால்? தெரியட்டுமே ராஜான்னு சொல்லிட முடியாது.
காரணம் ஆதி அப்பட்டமான அம்மா பிள்ளை. அவனுக்கு மனைவியாக தகுதியாக வீட்டிலேயே ஒரு பெண்ணை தயார் செய்து வர்றாங்க.

அழகு பார்வதி
பார்வதியாக நடிக்கும் மலையாள பெண் நல்ல அழகு. இவரை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்க்கவே செம்பருத்தி சீரியல் ஜீ தமிழ் டிவியில் சக்கைப் போடுபோட்டு வருகிறது. சொல்லப் போனால் சன் டிவியின் சித்தி சீரியலுக்கு நிகராக மக்களின் செல்வாக்கைப் பெற்று உள்ளது.

எனவே ஜவ்வு மாதிரி
இதனால் திருட்டு கல்யாணம் நடந்த விஷயத்தை ஒரு வருடம் ஆகியும் இன்னும் மறைத்து ஜவ்வு மாதிரி இழுத்து வந்தாலும், மக்களுக்கு சுவாரஸ்யமாகவே இருக்கிறது. செம்பருத்தி சீரியலின் வீடியோக்களை யூடியூபில் சாதாரணமாக பாரக்க முடிவதில்லை. அப்படி ஒரு கட்டுக் கோப்புடன் இந்த ஜீ தமிழ் டிவி இந்த சேனலை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications