Sembaruthi Serial: எங்கிட்டு திரும்புனாலும் கேட்டு போடறாய்ங்களே.. இருந்தாலும் விசுவாசம்!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் பார்வதிக்கும், ஆதிக்கும் கல்யாணம் நடந்தது அகிலாண்டேஸ்வரிக்கு எப்போது எப்படி தெரிய வருமோ என்று சீரியல் பார்ப்பவர்கள் கவலையாக இருந்தது.
கடைசியில் பார்வதியின் அப்பாவும், அகிலாண்டேஸ்வரியின் கார் டிரைவருமான சுந்தரத்துக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு. இதை நான் அம்மாவிடம் சொல்லியே தீருவேன் என்று விரைகிறார்.
நான் அம்மாவின் விசுவாசி... என் விசுவாசத்துக்கு பங்கம் வர விடமாட்டேன். இதை சொல்லியே தீருவேன் என்று முதலாளி அம்மாவின் வீட்டுக்கு வர, அகிலாண்டேஸ்வரியின் கணவரும், ஆதியின் தம்பி ,அதாவது அகிலாண்டேஸ்வரியின் இரண்டாவது மகன் இருவரும் டிரைவர் சுந்தரத்தை சொல்ல வேண்டாம் என்று தடுக்கிறார்கள்.

பார்வதியும் பெரிய தம்பியும்
நம்ம வீட்டு பெரிய தம்பியும் பார்வதியும் பழகிகிட்டு இருக்காங்கன்னுதான் நினைச்சேன். அவங்க கல்யாணமே செய்துகிட்டாங்க .இது உங்களுக்குத் தெரிஞ்சுமா பெரியய்யா இன்னும் அம்மாகிட்டே சொல்லமா இருக்கீங்கன்னு முதலாளி அம்மா புருஷன்கிட்டேயே கேட்கிறார் சுந்தரம்.

சுந்தரம் சொல்லாதே
சுந்தரம் அம்மாகிட்டே இப்போ சொன்னா என்ன நடக்கும்னே உனக்கு தெரியாது.இப்போதைக்கு சொல்லாதேன்னு சொல்லி எச்சரிக்கறாங்க. அதற்குள் அகிலாண்டேஸ்வரி மாடிப் படியில் கீழே இறங்கி வர்றாங்க. சுந்தரம் சொல்லாதே சொல்லாதே என்று இருவரும் எச்சரிக்க... சொல்லியே தீருவேன்..எனக்கு விசுவாசம்தான் முக்கியம்னு சொல்றார் இவர்.

சுந்தரம் கோயிலுக்கு
சுந்தரம் கோயிலுக்கு போகத்தான் வர சொன்னேன் போலாமான்னு கேட்கறாங்க.அம்மா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்மான்னு சொல்ல, சொல்லு சுந்தரம் என்ன விஷயம்னு கேட்கறாங்க. அதற்குள் வேணும்னே கணவர் வந்து அகிலாண்டேஸ்வரியிடம் பேச, சரி சுந்தரம் டைமாச்சு வண்டியை எடுங்கன்னு சொல்றாங்க.

காரிலாவது சொல்லிடுவேன்
சும்மா விட மாட்டேன்...காரில் போறப்போ சொல்லிருவேன்னு சொல்லிட்டு போறார் சுந்தரம். காரிலும் போனில் பேசிக்கொண்டே வர.அந்த போன் வச்சவுடன் அவங்க புருஷன் வேணும்னே காரில் போகும்போது போனில் பேச்சுக் கொடுத்துக்கிட்டு கோயிலுக்கே ஃபாலோ பண்ணிக்கிட்டு போயிடறாங்க.

கோயிலிலும் சொல்ல
கோயிலில் தியானத்தில் இருக்கும்போது சொல்லலாம் என்று வாயைத் திறந்தால் , அங்கு அகிலாண்டேஸ்வரி அம்மாவின் புருஷனும், இரண்டாவது பையனும் வந்து கேட் போடறாங்க. கோயிலில் நடந்த ஒரு காதல் கல்யாணத்தை எச்சரிச்சுட்டு வீட்டுக்கு வர்றாங்க. அப்புறமா சுந்தரம் நீ முக்கியமா என்னவோ பேசணும்னு சொன்னியே.. இப்போ சொல்லுன்னு சொல்றாங்க. இப்போ யார் கேட்டு போட்டும் நிக்கலை அவர்...அம்மா என் மகள் பார்வதி ஒரு தப்பு பண்ணிட்டாம்மா.. தப்பா என்ன தப்புன்னு இவங்க கேட்க, பார்வதி யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்துக்கிட்டம்மான்னு இப்போதைக்கு சொல்லிட்டார்.எபிசோட் முடிஞ்சு போச்சு.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications