சுருள் முடியா இருந்தா நல்லா ரொமான்ஸ் பண்ணலாமே.. மிரண்ட அண்ணாச்சி!
சென்னை: சன் டிவியில் சீனியர் சுட்டீஸ்னு ஒரு ரியாலிட்டி ஷோ வாராவாரம் ஞாயிற்று கிழமைகளில் நடத்தறாங்க. சன் டிவி சீரியல் குடுப்பத்து இளம் நடிகைகள் கலந்துக்கறாங்க.
லாஜிக் பார்த்தா ரியாலிட்டி ஷோஸ் பண்ண முடியாது. இது ஒரு ஜாலியான நிகழ்ச்சியாத்தான் போயிகிட்டு இருக்கு.இமான் அண்ணாச்சியை பொண்ணுங்க கலாய்க்கறதும், தள்ளிவிடறதும், பதிலுக்கு அண்ணாச்சி கலாய்க்கறதும் நல்லாத்தான் இருக்கு.
பார்க்க நல்லாருக்கா, நோ கமெண்ட்ஸ்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான். இந்த வாரம் கண்மணி சீரியல் குடும்பத்து பொண்ணுங்க கலந்துக்கிட்டாங்க.

சாம்பவி
எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்னு முத்துசெல்விகிட்ட அண்ணாச்சி கேட்டார். முத்துச்செல்வி பேரு சாம்பவியாம். தஞ்சாவூர் பூர்வீகம்னு சொன்னார். 6.2 அடி உயரத்துல மாப்பிள்ளை வேணும்னு சொன்னார். நல்ல பெரிய மீசை, கொஞ்சம் தாடி வச்சிருக்கணும்னு சொன்னார்.

லிசா
சவுந்தர்யாவா நடிக்கற லிசா, தனக்கு என்ன மாதிரி மாப்பிள்ளை வேணும்னு கேட்டப்போ. என்னை விட கொஞ்சம் உயரம் அதிகமா இருந்தா போதும். தலைமுடி சுருள் சுருளா இருக்கணும்னு சொன்னார். எதுக்கும்மா தலை முடி சுருள்சுருளா இருக்கணும்னு சொல்றேன்னு அண்ணாச்சி கேட்டார்.

ரொமான்ஸ்
முடிக்குள்ள கையை விட்டா வெளியில எடுக்கவே அஞ்சு நிமிஷம் ஆகணும்.. அப்படி சுருள் சுருளா இருக்கணும்னு சவுந்தர்யா சொல்ல, அவர் தலையில நீ எதுக்கும்மா கையை விடணும்னு அண்ணாச்சி கேட்டார். என் புருஷன் தலைக்குள்ள நான்தான் கையை விடுவேன். ( நான் எடுக்க முடியாம தவிக்க அவர் கத்த.. கடைசியில் பொய் கோபம் வந்து கட்டிலில் விழுந்து சண்டை போட.. கட்டிப்பிடிச்சு உருள... இது நம்ம கற்பனை) அப்படியே ரொமான்ஸ் பண்ணலாம் அண்ணாச்சின்னு சவுந்தர்யா சொல்ல அரங்கமே சிரித்தது.

புதுசா இருக்கே
இந்த ரொமான்ஸ் புதுசா இருக்கேம்மா... எந்த படம், சீரியலிலும் கூட இதுபோல வந்ததில்லைன்னு அண்ணாச்சி சொன்னார். எதுக்கு கவலை.. இனிமே வந்திரும் பாருங்க.. உண்மையில நடக்கறதைத்தானேங்க படத்திலும், சீரியல்களிலும் சொல்றாங்க... இந்த பொண்ணு எடுத்து கொடுத்திருக்கு... பொறுமை...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications