சின்ன வயசுதான்.. அம்மா வேஷம் போட்டாச்சு.. ஆனாலும் சில்லுன்னு கலக்கும் செந்தில் குமாரி!
சென்னை: வயசானாலும் சிலருடைய அழகு மாறாது அந்த மாதிரிதான் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் பருவ மங்கையாக கலக்கிக் கொண்டிருக்கும் செந்தில்குமாரி போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
சரவணன் மீனாட்சி சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து விருதும் வாங்கியிருக்கிறார். ஆனால் இன்ஸ்டாகிராமில் பருவ மங்கையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறாராம்.
இவர் சீரியல் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகத்தான் இருக்கிறது.

பளிச்சென 100 படம்
இவர் முதல் முதலில் பசங்க படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்தது மூலமாக இவருக்கு துணை நடிகைக்கான விஜய் டிவியின் விருதுக்கு பரிந்துரைக்கும் பட்டிருக்கிறார் .அதன்பிறகு தோரணை, பீசா போன்ற 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கலக்கியிருக்கிறார். ஆனால் இவர் சீரியலில் வருவதற்கு முன்பே சீரியலில் 2006 முதல் 2008 வரை ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் ஆசிரியர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நல்ல மாமியார்
அதுமட்டுமல்லாமல் சரவணன் மீனாட்சி சீரியல் 2016 முதல் 18 வரைக்கும் தெய்வானை கேரக்டரில் கலக்கியிருப்பார் . இந்த சீரியல் இவருக்கு சிறந்த மாமியார் விஜய் தொலைக்காட்சி விருதுகள் கிடைத்திருக்கிறது . அந்த அளவிற்கு இந்த சீரியலில் இவர் குடும்பபாங்கான கேரக்டரில் மருமகளையும் மகன்களையும் ஆதரித்து குடும்பத்தை கட்டிக்காக்கும் ஒரு மாமியாராக கலக்கியிருப்பார் .

சித்திரவதை மாமியார்
முதல் சீரியலில் மாமியார்னா இவரை மாதிரி இருக்கணும் என்று நடித்துக்கொண்டிருந்த இவர் என்னால் வில்லத்தனத்தில் வெளுத்து வாங்க முடியும் என்று தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்துக்கொண்டிருக்கிறார். பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் சித்தியாக நடித்திருக்கிறார். பல வீட்டில் நடக்கும் சித்தி கொடுமைகளை எதார்த்தமாக அப்படியே நடித்துக்கொண்டிருக்கிறார்.

விஷாலுக்கு குரல்
அதுமட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் . அவன் இவன் படத்தில் விஷாலுக்கும் இவர்தான் குரல் கொடுத்திருக்கிறாராம். பாரதி கண்ணம்மா சீரியலில் இவரது கேரக்டரை பார்த்து ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள் .அந்த சீரியல் வைரலாக போனாலும் இவரை பல பெண்கள் திட்டி தீர்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர் மிகவும் சாப்டான கேரக்டராம் வீட்டில் கோபமே படப் மாட்டாராம்.

கேரக்டராக மாறிடுவார்
ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேமரா முன்பு நடிக்க வந்துவிட்டால் கேரக்டராகவே மாறி விடுவாராம் . இவருக்கு ரொம்பவே பிடித்து தான் இந்த நடிப்பு துறைக்கு வந்திருக்கிறார் .ஆனால் இவருடைய காதல் கணவருக்கு இவர் நடிப்பது கொஞ்சம் கூட பிடிக்க வில்லையாம் நடிக்கவே கூடாது என்று சண்டை போட்டு அடிதடியில் முடிந்திருக்கிறதாம். இருந்தாலும் பிடிவாதம் பிடித்து தான் நடிப்பதற்கு வந்து கொண்டிருக்கிறார். இவருடைய கணவரின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாத இவர் இந்த நடிப்பதில் மட்டும் தான் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாராம் .

பேசவே பிடிக்காது
அதனால் தான் இவருக்கு சூட்டிங்கில் பேசுவது கொஞ்சம் கூட பிடிக்காது. எவ்வளவு அவரால் முடியுமோ அவ்வளவு இறங்கி நடித்து முடித்து விடுவாராம். ஒரே டேக்கில் முடிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம். அதுபோல சூட்டிங்கில் ரொம்ப நேரம் இருப்பது அவருக்கு பிடிக்காதாம் சூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்றுதான் இருப்பாராம். சீரியல்களிலும் திரைப்படங்களிலும் பிஸியாக இருந்தாலும் எல்லா நடிகைகளைப் போல இவரும் போட்டோஷூட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டாவில் ஆக்டிவ்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்களை அப்படியே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் . அந்த மாதிரிதான் தற்போது இவர் இவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .இதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். சீரியல்களிலும் படங்களிலும் வயதான கேரக்டரில் மாமியார் ஆகவும் அம்மாவாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பார்த்து அப்படி எல்லாம் தெரியவில்லையே என்று உருகி தான் வருகிறார்கள்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications