சஞ்சீவ் நடிக்கும் புது சீரியல்.. ஆரம்பமே இப்படியா? அந்த சீரியலின் இரண்டாவது பாகமா? அப்போ அசத்தல் தான்
சென்னை: சீரியல் நடிகர் சஞ்சீவ் நடிக்கும் புது சீரியலுக்கான ப்ரோமோ சன் டிவியில் வெளியாகி இருக்கும் நிலையில் அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி கதாநாயகியாக நடிக்கிறார்.
அதே நேரத்தில் தற்போது வெளியான ப்ரோமோவை பார்க்கையில் இது ஏற்கனவே நடிகை தேவயானி நடிப்பில் வெளியான கோலங்கள் சீரியலின் இரண்டாவது பாகம் போல தெரிகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் புதுசு புதுசா சீரியல் அறிமுகம் ஆகி வருகிறது. அதிலும் சமீபத்தில் அடுத்தடுத்து புது சீரியல்களுக்கான அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று லட்சுமி சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இது குறித்து இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
அதுபோல மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரையும் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் டிவியில் மட்டும் தான் எல்லோரும் சீரியல்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது கையில் இருக்கும் போனில் எந்த இடத்தில் இருந்தும் சீரியல் பார்க்கலாம் என்கிறபோது பலரும் இந்த சீரியலுக்கு அடிமையாக மாறி இருக்கிறார்கள்.
அதிலும் பாதி பேர் இந்த சீரியல்களை ஓட்டுவதற்காகவும் அந்த சீரியல்களை பார்த்து வருகிறார்கள். அதிலும் டிஸ்னி ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ தமிழ் போன்ற ஆப்கள் எல்லோருடைய ஃபோனிலும் இருப்பதால் எந்த நேரத்திலும் சீரியல் பார்க்க முடிகிறது. அதுபோல சீரியல் பார்க்காதவர்களையும் கூட இந்த சீரியல்களுக்குக்கான ப்ரோமோ மற்றும் ஸ்பெஷல் கிளிப்ஸ்களில் என்னதான் இந்த சீரியலில் இருக்கிறது என்று பார்க்க வைத்து விடுகிறது.
அந்த வகையில் காலை 9 மணிக்கு தொடங்கும் சீரியல்கள் இரவு 11 மணி வரைக்கும் பல சேனல்களில் புதிய பெயர்களில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அதிகமான சீரியல்களில் அரைத்த மாவை தான் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்தாலும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்பார்ப்பிலேயே பலர் இதைத்தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
இந்த வரிசையில் இப்போது சன் டிவியில் லட்சுமி என்ற சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. ஏற்கனவே சன் டிவியில் சிங்கப் பெண்ணே, எதிர்நீச்சல்,கயல், சுந்தரி, இனியா, வானத்தைப்போல என்று பல சீரியல்கள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் லட்சுமி சீரியலும் விறுவிறுப்பை ஏற்படுத்துமா என்பது பலருடைய எதிர்பார்ப்பு.
அதிலும் இந்த சீரியல் பிரேம் டைமான இரவு நேரத்தில் தான் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹீரோயினியாக நடிக்கின்றனர். அதுபோல இந்த சீரியலில் கதாநாயகி தன்னுடைய இரண்டு தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து தன்னுடைய மொத்த சம்பளத்தையும் தன்னுடைய குடும்பத்திற்கு கொடுப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் கதாநாயகனின் அம்மாவோ தன்னுடைய மருமகள் நிறைய நகைகளையும், மாதம் ஒன்றாம் தேதி வந்தால் மொத்த சம்பளத்தையும் என் கையில் கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். இப்படியாக இருப்பதில் மாமியார் மருமகளுக்குள் நடக்கும் கதை தான் இது என்று தெரிகிறது. ஏற்கனவே இது போன்று தான் கோலங்கள் சீரியலும் இருந்தது என்பது பலருடைய நினைவூட்டல் ஆக இருக்கிறது.
கோலங்கள் சீரியலில் நடிகை தேவயானி அபி கேரக்டரில் நடித்திருந்தார். அவர் தன்னுடைய குடும்பத்திற்காக தான் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் அவருடைய திருமணத்திற்கு பிறகு பல்வேறு பிரச்சினைகள் வந்தது. அதற்கு பிறகு அவர் எப்படி அந்த வாழ்க்கையில் ஜெயித்து வந்தார் என்பது போன்று கதை போய்க்கொண்டிருந்தது. அதுபோலத்தான் இப்போது இந்த சீரியலில் கதாநாயகி மகாலட்சுமி வாழ்க்கையும் இருக்குமா என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. சரி இன்னும் ஒரு சில நாட்களில் வெளிபரப்பாக போகும் இந்த சீரியல் எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications