கணவரின் பிறந்தநாளுக்கு இப்படி ஒரு பரிசா..!? சின்னத்திரை தம்பதிகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சீரியல் தம்பதிகள் ஆன ஸ்ரேயா அச்சன், சித்து ஜோடி தற்போது இன்ஸ்டாகிராமில் தங்களுடைய மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து உள்ளனர்.
தன்னுடைய கணவரின் பிறந்தநாளுக்கு மனைவியான ஸ்ரேயா கொடுத்த திடீர் பரிசு சித்துவை இம்ப்ரஸ் பண்ணி விட்டதாம்.
மனைவியை குறித்து காதல் கவிதைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்து வெளியிட்டு இருக்கிறார்.

திருமணத்தில் அறிமுகம்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் நடித்து வந்த சித்து மற்றும் ஸ்ரேயா அச்சன் ஜோடி நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக மாறி திருமணத்தில் இணைந்து இருக்கின்றனர். திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் காதலர்களாக பல இடங்களில் சுற்றிக் கொண்டிருந்தாலும் தற்போது திருமணத்திற்கு பிறகு இருவரும் வெவ்வேறு சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அந்த அளவிற்கு வெளியே செல்ல முடியவில்லை. அதனால் தற்போது ஸ்ரேயா தன்னுடைய காதல் கணவருக்காக அந்தமான் செல்வதற்கு டிக்கெட் எடுத்து கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
நடிகர் சித்து தற்போது ராஜா ராணி சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சேனல்களில் மெயின் கேரக்டரில் நடித்து வருகின்றனர். எப்போது மீண்டும் இவர்கள் ஒரே சீரியலில் நடிப்பார்கள் என்று இவருடைய ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்று இவர்கள் கூறியிருக்கின்றனர்.

காதல் கவிதைகள்
என்னதான் பிசியாக இருந்தாலும் தமக்கு பிடித்தவர்களோடு அருகில் இருப்பதில் இருக்கும் ஆனந்தம் வேறு எதுவும் இல்லை என்பதை தற்போது இந்த ஜோடி புரிந்து கொண்டார்கள் போல. அதனால் தான் இருவரும் நடிப்புக்கு டாட்டா காட்டி விட்டு அந்தமானுக்கு பறந்து இருக்கிறார்கள். அதுவும் தற்போது சித்துவின் பிறந்தநாள் வாரம் அதனால் தன்னுடைய கணவருக்காக இந்த ட்ரிப்பை ஷ்ரேயா அச்சன் தான் ரெடி பண்ணி இருக்கிறாராம். அதனால் தன்னுடைய மனைவிக்காக இந்த சிறந்த நேரத்தை உருவாக்கித் தந்த காதல் மனைவியை குறித்து உருக்கமாக பதிவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

குவியும் லைக்குகள்
திருமணத்திற்கு முன்பு காதலர்களாக இருக்கும் போதே சித்துவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஸ்ரேயா தற்போது தன்னுடைய கணவரின் பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுவாரா? ? அதனால் தான் இப்படி எல்லாம் ஒரு ஏற்பாடு என்று சிலர் கூறி வருகின்றனர். ஒரு சில நெட்டிசன்கள் இந்த மாதிரி எங்களுக்கு ஒரு மனைவி அமையவில்லையே என்று பீல் பண்ணி ஏக்கத்தோடு கமெண்ட்களை அனுப்பி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் சித்து இது எனது சிறந்த பிறந்தநாள்.,என் அன்பு மனைவி நான் உன்னை காதலிக்கிறேன்.!! என்று கேப்ஷனோடு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த போஸ்ட்க்கு இவர்கள் இருவரின் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு லைக் பட்டனை அழுத்தி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications