வானத்தைப்போல சீரியல் நடிகர் ஸ்ரீயின் மகள் இவர்தானா? லைக்குகளை குவிக்கும் குடும்ப புகைப்படங்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் கதாநாயகனாக சின்ராசு கேரக்டரில் நடிகர் ஸ்ரீ குமார் நடிந்து வருகிறார். இவர் அவருடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது. ஸ்ரீகுமாரின் மனைவியும் பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகை தான்.
சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளி திரையாக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் ஒரு சிலர் காதலித்து திருமணம் செய்து திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு தம்பதி தான் ஸ்ரீகுமார் மற்றும் ஷமிதா இவர்கள் இருவரும் சிவசக்தி என்ற சீரியலில் நடிக்கும் போது தான் அறிமுகம் ஆகி, 40 நாட்களுக்குள் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் ஸ்ரீ இன்னொரு பெண்ணை காதலித்து அது பிரேக்கப் ஆகி இருந்து நிலையில் ஷமிதா தான் ஸ்ரீக்கு ஆறுதலாக இருந்தாராம். பிறகு நாம் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவு எடுத்து வீட்டில் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்திருக்கிறார்கள். ஷமிதா ஏற்கனவே நடிகர் அருண்குமார் நடிப்பில் வெளியான பாண்டவர் பூமி திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.
அந்த திரைப்படத்தில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருந்தனர். அதிலும் "தோழா தோழா தோள் கொடு கொஞ்சம்" என்ற பாடலில் இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் பலருக்கும் ஃபேவரைட். ஆனால் முதல் திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றி கொடுத்திருந்தாலும் அதற்குப் பிறகு அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் வராத நிலையில் இவர் சின்ன திரையில் அறிமுகம் ஆகி இருந்தார்.

சின்னத்திரையில் முதல் முதலாக சிவசக்தி சீரியலில் தான் நடித்திருந்தார். அந்த சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் ஸ்ரீ யை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது ஸ்ரீ அவருடைய மனைவி ஷமிதா மற்றும் மகளோடு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
ஸ்ரீ மற்றும் ஷமிதா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார்கள். இவர்களுக்குள் விவாகரத்து நடக்கப்போகிறது என்று பல்வேறு வதந்திகள் பரவி வந்தாலும் அதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம். எங்கள் இருவருடைய வெற்றிக்கும் ஒருவருக்கு ஒருவர் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ஸ்ரீ நடித்துக் கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்களை ஸ்ரீ பகிர்ந்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் தங்களுடைய ஃபீலிங்கை கருத்துக்களில் கொட்டி வருகின்றனர்.

-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications