ஒரே சீரியலில் நடித்த நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்.. இதுக்கு மேலயும் கஷ்டப்படாம! எம்.எஸ் பாஸ்கர் உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் ஒன்றாக நடித்த இரண்டு நடிகர்கள் அடுத்தடுத்து காலமான செய்தி சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிலும் அந்த சீரியலில் கதாநாயகியின் தாத்தாவாக நடித்த நடிகர் ரவிக்குமார் காலையில் மரணமடைந்த நிலையில் மாலையில் சீரியல் நடிகர் ஸ்ரீதர் காலமான தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ரவிக்குமார் உடலை பார்த்து நடிகர் எம் எஸ் பாஸ்கர் சொன்ன வார்த்தை பலரையும் உருக வைத்து இருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே சினிமா துறையில் அடுத்தடுத்த மரண செய்திகள் வந்து ரசிகர்களை ஆழ்த்துகிறது. அவருடைய குடும்பத்தினர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள். நிலையில்லாத வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில்தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

சோகமான செய்தி
அதில் நமக்கு பரீட்சையமானவர்கள் இந்த உலகத்தில் திடீரென இல்லை என்ற செய்தியை கேட்கும் போது அனைவருக்குமே வருத்தம் ஏற்படுகிறது. அதுபோலத்தான் கடந்த மாதத்தில் நடிகர் ஹுசைனி காலமானார். அவரைத் தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனர் பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் இறப்பு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து இறப்பு
அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒரே சீரியலில் நடித்த இரண்டு நடிகர்கள் அடுத்தடுத்து காலமானார்கள். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் தாத்தா கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ரவிக்குமார் காலமானார். அதைத் தொடர்ந்து கதாநாயகியின் அப்பாவாக நடித்த ஸ்ரீதர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது பலரையும் ஃபீல் பண்ண வைத்தது.
வருத்தமான செய்தி
ஸ்ரீதர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வள்ளியின் வேலன் என்ற சீரியலில் கதாநாயகியின் அப்பாவாக நடித்துக் கொண்டிருந்தார். நேற்று கூட அவருடைய காட்சிகள் சீரியலில் வந்தது. ஆனால் அவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை ரசிகர்கள் வருத்தத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதுபோல ரவிக்குமார் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
உடல்நல பிரச்சனை
அதுபோல ரேடன்ஸ் நிறுவனம் சார்பாக ஒளிபரப்பாகும் பல சீரியல்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாக நேரில் சென்று இருந்தனர். அப்போது எம் எஸ் பாஸ்கர் ரவிக்குமார் உடலை பார்த்து வருத்தத்தோடு பேசி இருந்தார். அதில், "ரவிக்குமார் சில ஆண்டுகளாகவே உடல்நல பிரச்சனை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். இதுக்கு மேல கஷ்டப்படாம போயிட்டீங்க அண்ணா" என எம் எஸ் பாஸ்கர் உருக்கமாக பேசியிருக்கிறார்.
எம் எஸ் பாஸ்கர் உருக்கம்
ரவிக்குமாருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக கஷ்டப்பட்டு இருக்கிறார். அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது அவருடைய கஷ்டத்தை எம்எஸ் பாஸ்கர் நேரில் பார்த்திருக்கிறார். அதனால் அவர் இந்த உலகத்தை விட்டு இப்போது பிரிந்தது கூட அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் தான். அவர் இந்த உலகத்தில் இல்லை என்பது வருத்தமான செய்தியாக இருந்தாலும் அவருக்கு இனி கஷ்டம் இல்லை என்று ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications