Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளைந்து நெளிந்து புடவையில் ஆட்டம் போட்ட சுஜிதா...நோட்டம் போட்டு ஓடிவரும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு தற்போது அழகான புடவையில் அனல் பறக்கும் ஆட்டம் போட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டார் சுஜிதா.

ஓணம் பண்டிகை முடிவடைந்தாலும் இவருடைய கொண்டாட்டம் முடியவில்லையோ என்று ரசிகர்கள் கலாய்த்தாலும் வீடியோவை பார்த்து விழி அசைக்காமல் ரசிக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த வயசிலேயும் இவருடைய இளமை மட்டும் ஜொலித்துக்கொண்டே போகிறது என்று புலம்பும் ரசிகர்கள் எப்போதும்போல கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறார்கள்.

காதோரம் ஆடும் ஜிமிக்கி கம்மல்

காதோரம் ஆடும் ஜிமிக்கி கம்மல்

புடவையில் கலக்கலாக ஆட்டம் போட்டு பக்கத்தில் இருக்கும் குழந்தைக்கும் ஆட்டம் சொல்லிக் கொடுத்திருக்கும் அழகை பார்த்து அந்த குழந்தையை ரசிக்கவா? அல்லது குழந்தைபோல இவர் போடும் ஆட்டத்தை ரசிக்கவா? என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். என்னதான் நீங்கள் புலம்புனாலும் பாட்டையும் ரசியுங்கள், ஆட்டத்தையும் ரசியுங்கள் என்று அழகாக தன்னுடைய எக்ஸ்பிரஷனை காட்டியிருக்கிறார். இவரை சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து இப்ப வரைக்கும் பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது இவருடைய க்யூட்டான டான்ஸ் பார்த்து அசந்து தான் போய் இருக்கிறார்கள். எத்தனையோ நடிகைகள் புதுசு புதுசாக களமிறங்கி கொண்டிருந்தாலும் இவருடைய முகத்தை பல வருடங்கள் தொடர்ந்து பார்த்தாலும் போர் அடிக்கவில்லை. வருடங்கள் மட்டும்தான் ஓடிக் கொண்டிருக்கிறதே தவிர இவருடைய அழகு முகம் மட்டும் இன்னும் ரசிகர்களின் மனதில் இருந்து
மாறவே இல்லை.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரம் என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நடிப்பு என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்பே இவர் நடிப்பதற்கு வந்துவிட்டார். 1983ஆம் ஆண்டு இவர் பிறந்து அதே வருடத்தில் அப்பாஸ், முந்தானை முடிச்சு, வாஷி என்ற மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார். அதில் வாஷி மட்டும் மலையாள திரைப்படம்.முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்கியராஜின் பையனாக நடித்து இருப்பார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு தெரியவில்லை என்றாலும் இவர்தான் அந்த படத்தில் நடித்தார் என்று பலருக்கும் தெரியாது. இவருடைய அழகான முட்டைக்கண்ணும் பலருடைய பார்வைகளை ஈர்த்து விட்டது. அதற்கடுத்த வருடங்களும் தொடர்ந்து இவர் பல திரைப் படங்களிலும் நடித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அதிலும் ரோஜா, தேவர்மகன், பம்பாய் போன்ற திரைப்படங்கள் எல்லாம் இவருடைய சிறுவயது நடிப்பின் மையில்கல் தான்.

இப்படி அடிக்கடி வாங்க

இப்படி அடிக்கடி வாங்க

திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது சீரியலிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக மட்டும் அல்லாமல் குமரி பெண்ணாகவும் சைடு ரோல்களில் பல திரைப்படங்களில் நடித்து விட்டார். ஆனால் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் கவர்ச்சி மட்டும் இல்லவே இல்லையாம். குடும்பபாங்கான கேரக்டரில் மட்டுமே இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். முதல் முதலில் தமிழில் தூர்தர்ஷன் டிவியில் ஒரு பெண்ணின் கதை எனும் சீரியல் மூலமாக சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்குப் பிறகு உறவுகள் என்னும் சீரியலில் விஜய் டிவியிலும்,சன் டிவியில் திருவிளையாடல் சீரியலில் பார்வதியாகவும் நடித்திருக்கிறார். சாமி வேடங்கள் எல்லாம் ஒரு சிலருக்குத் தான் செட் ஆகும் அதில் இவரும் குறிப்பிடத்தக்கவர். அப்படியே அந்த பார்வதியையே நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது என்று பல ரசிகர்கள் கூறிவந்தனர். அதற்கு பிறகு பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனலட்சுமி என்ற தனம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தையாய் கொஞ்சும் அழகு

குழந்தையாய் கொஞ்சும் அழகு

இவர் எப்போதுமே சீரியலில் நடிக்கிறார் என்று சொல்வதை விடவும் சீரியலின் கேரக்டராகவே மாறி விடுவார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நடிப்பில் தத்ரூபத்தை காட்டி இருக்கும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதுவும் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் வீட்டின் மூத்த மருமகளாக இவரை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணாகத்தான் நினைத்து வருகிறார்கள். இந்த சீரியலில் பெரும் திருப்புமுனையாக தற்போது கண்ணன் ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்று இருந்தாலும் அனைவரும் ஆர்வமாக இருப்பது, அடுத்து தனத்திற்கு என்ன குழந்தை என்று தான். இவர் இந்த சீரியலில் ரொம்ப நாளுக்கு பிறகு இப்போதுதான் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் ரசிகர்கள் எல்லாம் இவரை பற்றி தான் அதிகமாக பீல் பண்ணி வருகின்றனர். இந்த நிலையில் இவர் தற்போது புடவையில் போட்ட ஆட்டத்தை பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள். ஆனாலும் இவருடைய சிரித்த முகத்தையும் அழகான டான்ஸ் தான் கண்ணுக்குள்ளே வலம் வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+